அரசு மருத்துவமனை விரிவாக்கம்:7 மாடியில் நவீன வசதிகளுடன் அமைகிறது கட்டடம்

விருதுநகர்:விருதுநகர் அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டுமானப் பணி ரூ.169 கோடி மதிப்பில் நடக்கும் நிலையில் இங்கு மருத்துவ கல்லுாரி பயிற்சி மாணவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய விடுதி, செவிலியர் விடுதி, 500 படுக்கை வசதிகளுடன் உள், வெளி நோயாளிகள் பிரிவுகள், டாக்டர்கள் குடியிருப்பு, நவீன உடல் சோதனை அறை அமைகிறது.

மருத்துவ கல்லுாரி கட்டுமானப்பணியின் ஒரு பகுதியாக இங்கு நடக்கும் இப்பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு நோயாளிகள் வேறு கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தரைத்தளத்துடன் 7 மாடியில் அமையும் இக்கட்டட பணிகளை 2021 டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment