அறிவிப்போடு சரி… செயல்பாடு இல்லை

விருதுநகர்:விருதுநகர் பகுதியில் கொரோனா தொற்று தடுப்பு பணிக்காக அறிவிக்கும் உத்தரவுகளை அதிகாரிகளும் கண்டுகொள்ளாத நிலையில் மக்களும் பின்பற்றாது உள்ளனர்.

நகராட்சி சார்பில் வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் வகையில் நீலம், பச்சை, சிவப்பு நிறங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. முறையாக மேற்கொள்ளமால் இதை அப்படியே விட்டனர். இதற்கான அடிக்கப்பட்ட 45 ஆயிரம் ஸ்டிக்கர்களும் வீணானது.

மதுரை ரோடு, புல்லலக்கோட்டை ரோடு பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு தடை என விருதுநகர் அவசர நிகழ்வு மேலாண்மை அலுவலர் பானுகோபன் அறிவித்திருந்தார். அதன் நடவடிக்கைகளும் இல்லை. இவர்கள் தரும் இது போன்ற அறிவிப்புகளால் மக்கள் மட்டுமல்ல பத்திரிகையாளர்களும் குழம்புகின்றனர்.

இதை உணரும் மக்களும் அரசு அதிகாரிகள் அறிவிப்புகள் வெற்று பேச்சு தான் என நினைத்து கண்டுக்காது சுற்றுகின்றனர். தேசபந்து மைதானம், கே.வி.எஸ்., பள்ளி, பழைய பஸ் ஸ்டாண்ட் வாகன நிறுத்துமிடமாக அறிவிக்கப்பட்டு அதுவும் புஸ்ஸானது. மேலதிகாரிகள் களப்பணிகளும் வெறுமனே ஆக கீழ் அதிகாரிகளும் மெத்தனம் காட்டுகின்றனர். இதனால் கொரோனாவும் கோரத்தாண்டவமாடுகிறது. அறிவிப்பு செய்தால் அதை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகமும் முன் வர வேண்டும்.

Related posts

Leave a Comment