முன்னாள் காவல் துறை அதிகாரி கலியமூர்த்தி தகவல்

செல்போனில் விளையாடும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்; இணையதள சூதாட்டத்தில் ஒருவர்கூட ஜெயிக்க முடியாது: முன்னாள் காவல் துறை அதிகாரி கலியமூர்த்தி தகவல்

🔲இணையதள சூதாட்டத்தில் ஒருவர் கூட ஜெயிக்க முடியாது என்று ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

🔲சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நிதிஷ்குமார் (20), காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

🔲டாட்டூ போடும் தொழிலை பகுதி நேரமாகவும் செய்து வந்துள்ளார். சென்னை அமைந்தகரையில் உள்ளதனியார் டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். நேற்று முன் தினம் தான் பணி செய்த கடைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

🔲இணையதளம் மூலம் சூதாடி பணம் சம்பாதிக்க நினைத்த நிதிஷ்குமார், பகுதிநேர வேலை பார்த்து சம்பாதித்த அனைத்து பணத்தையும் தோற்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

Related posts

Leave a Comment