ரபேல் நாளை இந்தியா வருகை: அம்பாலா அருகே 144 தடை

ரபேல் நாளை இந்தியா வருகை: அம்பாலா அருகே 144 தடை

🔲ரபேல் விமானம் நாளை(ஜூலை 29) இந்தியா வருவதையொட்டி, தரையிறங்க உள்ள அம்பாலா விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

🔲ஐரோப்பிய நாடான பிரான்ஸ் ஒப்படைத்துள்ள, ஐந்து, ‘ரபேல்’ போர் விமானங்கள், பிரான்சில் இருந்து புறப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் மொத்தம், 7,000 கி.மீ., துாரத்தை கடந்து, நாளை இந்தியா வந்து சேருகின்றன.

🔲நடு வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்காக, பிரான்ஸ் விமானமும் உடன் வருகிறது. வழியில், மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள பிரான்ஸ் விமானப்படை தளத்தில் மட்டும் நிறுத்தப்பட்டன.

🔲ஹரியானா மாநில

ம், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில், ரபேல் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு, இந்த விமானங்கள், நம் படையுடன் இணைய உள்ளன. இந்நிலையில், ரபேல் விமானம் நாளை தரையிறங்குவதையொட்டி, அம்பாலா விமான நிலையத்தை சுற்றி, 4 கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

🔲மேலும், விமான நிலையம் தரையிறங்கும் போது, போட்டோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 கி.மீ., சுற்றியுள்ள பகுதிகளில் டுரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment