வெற்றி நிச்சயம்!

கோபத்தில் சத்தம் 🟪🟪

🟪🟪 நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடுகிறோம் ? கோபம் வந்தால் என்ன செய்வோம்?

🟪🟪 யார்மேல் நமக்கு கோபமோ, அவர்களிடம் சத்தம் போட்டு சண்டை பிடிப்போம்..

🟪🟪 இல்லையென்றால் பேசாமல் அமைதியாக இருந்து விடுவோம்…

🟪🟪 ஆனால், எப்பவாவது யோசித்திருப்போமா?

🟪🟪 யார்மேல் நமக்கு கோபம் வந்தாலும் அவர்கள் நமக்கு மிக அருகில் தானே இருக்கிறார்கள் …

🟪🟪 எதற்காக ஊருக்கே கேட்கிற மாதிரி சத்தம் போட வேண்டும் ?

🟪🟪 மெதுவாக சொல்ல வேண்டியதைச் சொன்னாலே அவங்களுக்கு கேட்குமே!

🟪🟪 நானும் யோசிச்சதில்லைங்க!

🟪🟪 ஆனால் இந்த நிகழ்வைப் பார்த்தபிறகு???

🟪🟪 ஒரு கிராமத்து தந்தை குளத்தில் குளித்து விட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் பட்டணத்தில் இருந்து வந்த பக்கத்து வீட்டு பட்டதாரி குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

🟪🟪 அதைப் பார்த்த தந்தை, தன் பிள்ளைகளிடம் திரும்பி சிரித்துக் கொண்டே கேட்கிறார்?

🟪🟪 ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம் போட்டு சண்டை பிடிக்கிறார்கள்?

🟪🟪 பிள்ளைகள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்.. பின்னர்..

🟪🟪 பிள்ளைகளில் ஒருவர் கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்!

🟪🟪 தந்தை ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உனக்கு அருகில் தானே நிற்கிறார்கள்!

🟪🟪 நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே!

🟪🟪 ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள் ….

🟪🟪
ஆனால் எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை!

🟪🟪 கடைசியாக தந்தை பதில் கூறுகிறார்…..

🟪🟪 எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்றுவிடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

🟪🟪 மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம் போட வேண்டியிருக்கும்!

🟪🟪 அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!

🟪🟪 ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும் போது என்ன நடக்கிறது?

🟪🟪 அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்!

🟪🟪 காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு அருகாமையிலே இருக்கும்!

🟪🟪 மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

🟪🟪 தந்தை தொடர்ந்து கூறுகிறார்…

🟪🟪 இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் போது என்ன நடக்கும்?

🟪🟪 அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசுகிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்!

🟪🟪 இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும் போது வார்த்தையே தேவைப்படாது!

🟪🟪 அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதே மனதின் எண்ணம் வெளிப் பட்டு விடும் ….

🟪🟪 தந்தை கடைசியாக பிள்ளைகளைப் பார்த்து கூறுகிறார்,

🟪🟪 அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும் போது

🟪🟪 “உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்,

🟪🟪 மனதின் தொலைவை அதிகப் படுத்தும் வார்த்தைகளை உபயோகப் படுத்தாதீர்கள்!”

🟪🟪 அப்படி செய்யாமல் போனால், “ஒருநாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசியில் ஒன்று சேரும் பாதையே அடைக்கப் பட்டு விடும் நிலை வந்து விடும்!” இதை சொல்லிக் கொண்டுருக்கும் போதே தந்தையை பிள்ளைகள் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். அனைவரும் ஆனந்தக் கண்ணீருடன் ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டவர்களாக வீடு திரும்பினர்.

🟪🟪 ஆம், பக்கத்தில் சத்தம் போட்டுக் கொண்டிருந்த படித்த பட்டணத்து குடும்பம், இவர்களைப் பார்த்து அமைதியடைந்தார்கள். இந்த நிகழ்வை பார்த்து திருந்தினார்கள். அமைதியாக வ …
வெற்றி நிச்சயம்!

Related posts

Leave a Comment