வெல்வோமே தொற்றை விட அதிகரிக்கிறது டிஸ்சார்ஜ் எண்ணிக்கை

அருப்புக்கோட்டை,: விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதே போல் டிஸ்சார்ஜ் விகிதமும் அதிகரித்து வர கொரோனாவை விரட்டியடிக்க மக்களும் ஆயுத்தமாகிவிட்டனர்

நேற்றைய நிலவரப்படி 338 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் 628 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை பாதித்த 6302 பேரில் 3918 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2321தான் பேர் சிகிச்சையில் உள்ளனர். 63 பேர் பலியாகி உள்ளனர். ஒவ்வொரு நாளும் மூன்றில் 2 சதவீதத்தினர் குணமடைந்து வெளியேறி வருகின்றனர். பலியானோரில் 90 சதவீதம் பேர் நீரிழிவு, வயது முதிர்வு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் இறந்தவர்கள் தான்.

சென்னை, மதுரை போல் அதிகளவில் பரிசோதனை செய்யப்படுவதால் தொற்றும் அதிகளவில் ஏற்படுகிறது. அதிகளவில் பரிசோதித்து தனிமைப்படுத்துவதால் நோய் பரவலின் வீரியத்தை கட்டுப்படுத்தமுடியும் என கூறும் மருத்துவ நிபுணர்கள் தொற்று பாதிப்பில் 10 நாட்களில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர்.

மக்களும் தொற்று அண்டாமல் இருக்க உப்பு கலந்து சுடுநீர் கரைசல், நோய் எதிர்ப்பு சக்தியூட்டும் உணவுகள் ,கபசுரகுடிநீர்,சமூக இடைவெளி ,மாஸ்க் அணிதல் ,கைகழுவுதல் என தங்களை மாற்றி கொண்டு வருகின்றனர். இதன் வழிமுறைகளையும் அரசு கூறும் அறிவுரைகளையும் தொடர்ந்து

பின்பற்றினாலே கொரோனாவை விரட்டியடிக்க முடியும்.

தன்னம்பிக்கை போதும்

கடந்த சில நாட்களாக தொற்றின் எண்ணிக்கையை மட்டுமே கவனித்து வந்திருந்தோம். ஆனால் தொற்றை காட்டிலும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகமாக உள்ளது . இதன் மூலம் விருதுநகர் மாவட்டம் விரைவில் தொற்றிலிருந்து மீளும். அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனையும் இதே தான். தொற்று பாதிப்பில் இருந்து மீண்டோரும் வரும் நாட்களில் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

மோகன் வேல்,சமூக ஆர்வலர்,அருப்புக்கோட்டை.

Related posts

Leave a Comment