ரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம்: ராஜ்நாத் சிங்

ரஃபேல் போர் விமானங்கள் வருகை.. இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடக்கம்: ராஜ்நாத் சிங்

டெல்லி: ரஃபேல் போர் விமானங்கள் வருகையால் இந்திய ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் தொடங்கியிருக்கிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். powered by Rubicon Project பிரான்ஸில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் இன்று மாலை 3 மணிக்கு ஹரியானாவின் அம்பாலா விமான படை தளத்தில் பாதுகாப்பாக தரை இறங்கின. அங்கு ரஃபேல் போர் விமானங்களுகு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உரிய தருணத்தில் ரஃபேல் போர் விமானங்கள் வந்தடைந்துள்ளன. இந்த போர் விமானங்களை பாதுகாப்பாக கொண்டுவந்து சேர்த்த விமான படையினருக்கு எனது வாழ்த்துகள். பிரான்ஸ் அரசு, டசால்ட் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு என்னுடைய நன்றி. கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையே ரஃபேல் போர் விமானங்களை அனுப்பி வைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது என்பது பிரதமர் மோடி ஒருவரால்தான் சாத்தியமானது. சரியான நேரத்தில் தீரமிக்க முடிவை எடுத்து செயல்படுத்தி உள்ளார் பிரதமர் மோடி.

உலகிலேயே வல்லமை மிக்கவை ரஃபேல் போர் விமானங்கள். இந்த ரஃபேல் போர் விமானங்கள் வருகையால் இந்திய விமானப்படை வலிமையடையும். தேசத்தின் எந்த ஒரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள ரஃ பேல் போர் விமானங்கள் உறுதுணையாகவும் இருக்கும். ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை அத்தனைக்கும் பதிலளித்துவிட்டோம்.

இனியும் ரஃபேல் போர் விமானம் தொடர்பாக விமர்சித்துக் கொண்டிருந்தால், அவர்கள் தேசத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்களை விரும்புகிறவர்களாகத்தான் இருப்பார்கள். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

Related posts

Leave a Comment