கல்லூரி இறுதி தேர்வு…மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு…உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம்!

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதற்கு மாநில அரசுகளுக்கு எந்த அதிகாராமும் இல்லை என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிராமண பத்திரம் ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மூடப்பட்டு இருக்கும் என்று நேற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் இறுதித் தேர்வுகளில் மீதம் இருக்கும் பாடங்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, கடந்த கல்வி ஆண்டில் எடுக்கபப்ட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சியை அறிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் கேள்விக்குறியானது. இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை…

Read More

ஒத்த அறிவிப்பில் திண்டுக்கல் அதிமுகவே தலைகீழாக மாறிடுச்சே.. மீண்டும் தலைதூக்கிய ‘நத்தம்’ கோஷ்டி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அதிமுக 2 ஆக பிரிக்கப்பட்ட நிலையில் இதுவரை அமைதியாக இருந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் வலம் வர தொடங்கியுள்ளனர். 1989, 1991 லோக்சபா தேர்தல்களில் திண்டுக்கல் தொகுதி எம்.பியாக இருந்தார் சீனிவாசன். பின்னர் அதிமுகவின் பொருளாளர் நிலைக்கும் உயர்ந்தார். பின்னர் மீண்டும் எம்.பியாக்கப்பட்டார் சீனிவாசன். ஏறுமுகத்தில் நத்தம் விஸ்வநாதன் அப்போது நத்தம் விஸ்வநாதனுக்கு அதிமுகவில் பெரிய செல்வாக்கு இல்லைதான். ஆனால் காலங்கள் மாறிப் போக நத்தம் விஸ்வநாதனுக்கு எல்லா சூழ்நிலையும் ஏறுமுகமானது. அவர் ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய அமைச்சரானார். அதிமுகவின் ஐவர் அணியில் ஒருவராக உயர்ந்தார். அப்போது சீனிவாசன் அணி என்பதே இல்லை என்கிற நிலைதான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தது. ஜெ. எழுதிய முடிவுரை 2016 சட்டசபை தேர்தலின்போது நத்தம் விஸ்வநாதன் கட்டி வைத்த கோட்டையை தரைமட்டமாக்கிவிட்டார் ஜெயலலிதா.…

Read More

சிவகாசியில் வீடு வீடாக கொரானா பரிசோதனை

சிவகாசியில் வீடு வீடாக கொரானா பரிசோதனை சிவகாசி நகராட்சி சாா்பில் வியாழக்கிழமை 21 ஆவது வாா்டுப் பகுதியில் வீடுவீடாக சென்று தூய்மை திட்ட பணியாளா்கள் கரோனா பரிசோதனையை மேற்கொண்டனா்.இங்குள்ள அய்யப்பன்காலனி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை திட்டப் பணியாளா்கள் 10 போ வீடுவீடாகச் சென்று தொமல் ஸ்கேனா் மூலம் ஒவ்வொருவரின் வெப்பநிலையை பரிசோதனை செய்தனா். மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டா் மூலம் ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு காய்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மேலும் அந்த வாா்டில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Read More

முதுகில் குத்திய ஜிங்பிங்.. சீனாவின் செயலால் புடின் கோபம்.. உறவை முறிக்க ரெடியாகும் ரஷ்யா..

மாஸ்கோ: ரஷ்யா சீனா இடையே மொத்தமாக உறவு முறியும் நிலைக்கு சென்று உள்ளது. இரண்டு நாட்டு உறவு இதுவரை இல்லாத மோசமான நிலையை தற்போது அடைந்துள்ளது. சீனாவிற்கு உலகில் இருக்கும் இரண்டு பெரிய நட்பு நாடுகள் என்றால் அது வடகொரியாவும், ரஷ்யாவும்தான். அமெரிக்க எதிர்ப்பு என்ற குடையின் கீழ் இந்த மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்து இருக்கிறது. ஆனால் இந்த உறவில் தற்போது விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது. சீனாவுடன் தனது நட்பை எப்போதும் போல வடகொரியா தொடர்ந்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் ரஷ்யா – சீனாவின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து நிகழந்த சம்பவங்கள் இதை உறுதி செய்துள்ளது. என்ன செய்தது அதன்படி முதலில் கொரோனா பாதிப்பு இருந்த போதே ரஷ்யா, சீனாவின் மீது லேசான குற்றச்சாட்டுகளை வைத்தது. கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம்…

Read More

போகிற போக்கில் என்னை கொரோனா லேசாக டச் செய்துவிட்டது.. கலகலப்பாக பேசிய செல்லூர் ராஜு.. செம வரவேற்பு!

மதுரை: கொரோனா என்னை லேசாக டச் செய்துவிட்டது போனது என்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு உற்சாகமாக பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதிமுக, திமுக என்று இரண்டு முக்கிய கட்சியிலும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர்கள் தற்போது தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த 17ம் தேதி குணமடைந்தார். பேட்டி அளித்தார் இது தொடர்பாக அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார். அதில், போகிற போக்கில் கொரோனா என்னை டச் செய்து விட்டது. வடிவேல் போல என்னை கொரோனா லைட்டாக டச் செய்துவிட்டது சென்றது . எனக்கு லேசான…

Read More

உறவு முக்கியம்.. இந்தியா இல்லாமல் இருக்க முடியாது.. வர்த்தக மோதலால் கதிகலங்கிய சீனா.. திடீர் அறிக்கை

பெய்ஜிங்: சீனாவுடன் பொருளாதார ரீதியான உறவை முறித்தால் அது சிக்கலாக முடியும், இரண்டு நாட்டின் உறவு முக்கியம் என்று சீனாவின் வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியா சீனா இடையே லடாக் மோதல் இன்னும் முடியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. லடாக்கில் இருந்து இன்னும் சீனாவின் படைகள் மொத்தமாக வாபஸ் வாங்கவில்லை. இன்னும் சீனாவின் படைகள் சில இடங்களில் உள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் சீனாவிற்கு பொருளாதார ரீதியாக இந்தியா எதிர்ப்பு காட்ட தொடங்கி உள்ளது. கிட்டத்தட்ட 100 சீனாவின் செயலிகள் இதுவரை இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. தொடர் தாக்குதல் அதேபோல் சீனாவில் இருந்து தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறி வருகிறது. சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் எல்லாம் இந்தியா வர தொடங்கி உள்ளது. சீனாவிற்கு எதிராக பொருளாதார ரீதியாக இந்தியா எடுக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது…

Read More

ஒருபக்கம் லாக்டவுன்.. இன்னொருபக்கம் சரியும் கொரோனா கிராப்.. சரியான பாதையில் தமிழகம்.. குட்நியூஸ்!

சென்னை: தமிழகத்தில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. ஒரு பக்கம் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் கேஸ்கள் குறைய தொடங்கி வருவது நல்ல முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் இன்று 5864 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 239978 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதேபோல் இன்று சென்னையில் 1175 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னையில் மொத்தமாக 98767 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு பக்கம் தினமும் 5000 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் வரும் நிலையில் தற்போது லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை இருந்த தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சில சில தளர்வுகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இ – பாஸ் தொடங்கி பேருந்து போக்குவரத்து தடை வரை பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து…

Read More

காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி.. வழக்கமான பரிசோதனை!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தற்போது நாடு முழுக்க அமைப்பு ரீதியாக பிரச்னையை சந்தித்து வருகிறது. ராஜஸ்தான் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது . அதேபோல் பல மாநிலங்களில் சரியான தலைவர் இல்லாத நிலை உள்ளது. இதனால் தற்போதைய தேசிய தலைவர் சோனியா காந்தி மீதும் புகார்கள் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை, சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Read More

Edappadi K Palaniswami

பள்ளிகள் திறக்காத இந்நிலையில் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்கள் படிப்பதற்கான வழிமுறைகளையும், மன அழுத்தம் தவிர்க்க ஆறுதலும் கூறி, பெற்றோர்களிடமும் அறிவுறுத்தி வரும் கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அரசுப்பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமி அவர்களின் செயல் நெகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களின் வீடுகளுக்கே தேடிச் செல்லும் தமிழாசிரியை மகாலட்சுமி அவர்களின் சேவைக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்!

Read More