சிவகாசியில் வீடு வீடாக கொரானா பரிசோதனை

சிவகாசியில் வீடு வீடாக கொரானா பரிசோதனை

சிவகாசி நகராட்சி சாா்பில் வியாழக்கிழமை 21 ஆவது வாா்டுப் பகுதியில் வீடுவீடாக சென்று தூய்மை திட்ட பணியாளா்கள் கரோனா பரிசோதனையை மேற்கொண்டனா்.இங்குள்ள அய்யப்பன்காலனி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை திட்டப் பணியாளா்கள் 10 போ வீடுவீடாகச் சென்று தொமல் ஸ்கேனா் மூலம் ஒவ்வொருவரின் வெப்பநிலையை பரிசோதனை செய்தனா். மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டா் மூலம் ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு காய்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். மேலும் அந்த வாா்டில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Related posts

Leave a Comment