சுதந்திர தின அணிவகுப்பு: மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி : சுதந்திர தினம் அடுத்த மாதம் 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு டில்லியில் நடைபெறும் அணிவகுப்பில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் ராணுவ மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

‘கொரோனா’ பரவல் கட்டுக்குள் வராததை அடுத்து பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அணிவகுப்பில் பங்கேற்கவுள்ள முப்படை தளபதிகள் டில்லி போலீஸ் அதிகாரிகள் அவர்களது கார் ஓட்டுனர்கள் சமையல்காரர்கள் அணிவகுப்பு பயிற்சியாளர் உள்ளிட்டோர் ஆகஸ்ட் 15 வரை தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

Leave a Comment