தித்திக்கும் அதிரசம்; திகட்டாத கொழுக்கட்டை வாழ்வாதாரத்திற்கு வழி காணும் மகளிர் குழுக்கள்

விருதுநகர்:பெண்கள் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கே மகளிர் சுய உதவி குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டன. குடும்ப பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு பெண்களின் முன்னேற்றமும் தற்போது அத்தியாவசிய தேவையாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பது மிகுந்த சவாலான வேலையாக உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் மகளிர் சுய உதவி குழுக்களின் உழைப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. மகளிர் குழுக்களின் வளர்ச்சி இயல்பானவை அல்ல. அவர்களுக்கும் சவால்கள் இருக்கின்றன.

சிலர் உற்பத்தியில் வெற்றி பெற்றாலும் விற்பனையில் பின் தங்கி விடுவர். இதையெல்லாம் சமாளித்து விருதுநகர் கலெக்டர் அலுவலக மகளிர் திட்டத்தின் பல முன்னோடி மகளிர் குழுக்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. விருதரசி மகளிர் குழுவில் லெமன், தக்காளி, வெஜ் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள் குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் விற்கப்படுகிறது.
வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் குழு வீட்டுமுறை சமையலை செய்து பரிமாறுகிறது. ரசம், கூட்டு ஆகியவற்றின் மணத்திற்கு தனி வாடிக்கையாளர்களே உள்ளனர். கொழுக்கட்டை, அதிரசம், முறுக்கு உள்ளிட்ட நொறுக்குத் தீனி வகைகளும் விற்கப்படுகிறது. பெண்களும் சுய முன்னேற்றத்தில் சாதிக்கலாம் என்பதை வெற்றியின் மூலம் எடுத்துரைக்கின்றன இந்த மகளிர் குழுக்கள்.

Related posts

Leave a Comment