புதுடில்லி : ‘கொரோனா’ ஊரடங்கில், வரும், 1ம் தேதி முதல், மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடில்லி : ‘கொரோனா’ ஊரடங்கில், வரும், 1ம் தேதி முதல், மூன்றாம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

‘கொரோனா’ ஊரடங்கில் ஆக., 1ம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ‘கொரோனா’ தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இரண்டு கட்ட தளர்வுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 1 முதல் மூன்றாம் கட்ட தளர்வுகளை அறிவித்துள்ளது. மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்த பின் இந்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அதன் விபரம்:

தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை விரைவில் வெளியிடும். முக கவசம் தனி மனித இடைவெளி பின்பற்றி சுதந்திர தின விழா கொண்டாட அனுமதி வழங்கப்படுகிறது.

‘வந்தோ பாரத்’ திட்டத்தின் கீழ் சர்வதேச விமான பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் இரவு நேரங்களில் வெளியே நடமாட பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுகிறது.

‘மெட்ரோ’ ரயில், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான கூடங்கள், கலை அரங்கங்கள் இயங்காது. அரசியல், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சமூக,- கலாச்சார கூட்டங்களுக்கான தடை உத்தரவு தொடரும்.

பள்ளிகள், கல்லுாரிகள் பயிற்சி நிலையங்கள் அடுத்த மாதம் 31 வரை திறக்க அனுமதியில்லை. மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு தடையில்லை. இதற்கு தனியாக அனுமதி மற்றும் ‘இ – பாஸ்’ பெற தேவையில்லை. தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு வழக்கம் போல் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related posts

Leave a Comment