காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதி.. வழக்கமான பரிசோதனை!

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தற்போது நாடு முழுக்க அமைப்பு ரீதியாக பிரச்னையை சந்தித்து வருகிறது. ராஜஸ்தான் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது . அதேபோல் பல மாநிலங்களில் சரியான தலைவர் இல்லாத நிலை உள்ளது.

இதனால் தற்போதைய தேசிய தலைவர் சோனியா காந்தி மீதும் புகார்கள் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தற்போது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை, சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார் என்று காங்கிரஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment