தோனிக்கு முன்பே கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை தற்போதே அறிவித்த சுரேஷ் ரெய்னா! ரசிகர்கள் பெருங்கவலை

கடந்த 2 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டைத் தான் ஆடவில்லை என்று கூறும் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் மிகவும் வணிக மயமாகி விட்டது என்றார்.

தி சூப்பர் ஓவர் நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா கூறும்போது, “கிரிக்கெட்டை நான் மகிழ்வுடன் ஆடும் வரை இந்திய அணியில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆவலுடனேயே ஆடுவேன்.

ஒவ்வொரு உடல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னும் வித்தியாசமான மனிதனாகி விட்டதாகக் கருதுவேன். ஒவ்வொரு மறுவாழ்வுக்குப் பிறகு கடினமாக மாறினேன். இதன் பிறகு மீண்டும் ஆடுவேன் என்றுதான் நினைப்பேன்.

ஆனால் இதற்காக என்னை உந்தித் தள்ள விரும்பவில்லை. மீண்டும் விளையாடுவோம் என்ற உணர்வு இருக்கிறது. ஆனால் அதே வேளையில் என் கிரிக்கெட் ஆட்டத்தை நான் மகிழ்வுடன் ஆடவேண்டும்.

கடந்த 2 ஆண்டுகள் நான் கிரிக்கெட்டை அவ்வளவு மகிழ்ச்சியுடன் ஆடவில்லை, எனவே அடுத்த 3-4 ஆண்டுகள் நான் ஆடுவேனா மாட்டேனா என்பதை விதியிடம் விட்டு விடுகிறேன்.

புன்னகையுடன் களமிறங்கி ஆட்டத்தை ரசித்து ஆடவேண்டும் என்பதே இப்போதைய விருப்பம். கிரிக்கெட் மிகவும் வணிக மயமாகி விட்டது, ஆனாலும் கடைசியில் இறங்கி ஆடி திரும்பி வரும்போது மகிழ்ச்சியுடன் வர வேண்டும் என்பதே. இதைத்தான் நான் களமிறங்கி திரும்பும் போதெல்லாம் தேடுவேன். எப்போதும் மகிழுடன் இருக்க விரும்புகிறேன்

இன்னும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கிறேன், எப்படி போகிறது என்று பார்ப்போம்” என்றார் ரெய்னா.

Related posts

Leave a Comment