பயன்பாட்டுக்கு வராது வீணாகும் கட்டடங்கள் மெட்டுகுண்டில் வீணடிக்கப்பட்ட அரசு நிதி

அருப்புக்கோட்டை:செயல்படாத கால்நடை மருத்துவமனை, பயன்பாட்டிற்கு வராத கழிப்பறை என அருப்புக்கோட்டை மெட்டுகுண்டில் அரசு கட்டடங்கள் அனைத்தும் வீணாகி வருகின்றன.இங்கு கீழ தெரு, மேல தெரு, காலனி என 5 க்கு மேற்பட்ட தெருக்கள் உள்ளன.
2019 ல் ரூ. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டி முடிக்கப்பட்ட நவீன சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வராமல் இன்றும் பூட்டியே கிடக்கிறது. கால்நடைகளுக்கு சிகிச்சை பெற இங்குள்ளோர் 4 கி.மீ., துாரமுள்ள மலைப்படி பாலவநத்தம் நடந்து செல்ல வேண்டிய நிலையில் இங்கு கால்நடை பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
இதுவும் பயன்பாடு இல்லாமல் கட்டடமும் சேதமாகி வருகிறது.குடிநீரானது வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே வருகிறது. தெருக்களில் உள்ள சாக்கடைகளும் சேதமுற்று உள்ளது. குளியல் தொட்டி கட்டியும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. தெரு விளக்குகளும் எரிவதில்லை.

Related posts

Leave a Comment