வியாபாரிகள் வர அனுமதியுங்க: பட்டாசு உற்பத்தியாளர்கள் வேண்டுகோள்

சிவகாசி:ஊரடங்கு நீட்டிப்பால் தனிநபர் வரவும் தடையால் பாட்டாசு வியாபாரிகள் வர முடியாத நிலையில் உற்பத்தி பட்டாசுகள் தேங்கி உள்ளது.

இதற்கு தளர்வு வழங்க சிவகாசி மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் அனுப்பிய மனு: விபாபாரிகள் வராது ரூ. பல கோடி பட்டாசுகள் தேக்கம் அடைந்துள்ளதால் உரிமையாளர் களால் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மூலப் பொருட்கள் வாங்க பணம் இல்லாமலும் ஏற்கனவே வாங்கிய வங்கி கடனை கட்ட முடியாமல் திணறுகின்றனர். இதனால் பட்டாசு உறபத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும். வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு, வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் விருதுநகர் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என கேட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment