கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் .. குஷ்பு ட்வீட்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமித் ஷா விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன் என காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பொதுமக்களிடம் இருந்து முன்கள பணியாளர்களான டாக்டர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், செவிலியர் உள்ளிட்டோர் அதிகமாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் அண்மைக் காலமாக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, அமைச்சர் கேபி அன்பழகன் மற்றும் 18க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதேபோல் ஐஏஏஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தை தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமித்…

Read More

ஓய்வு அறிவிச்சிடலாமான்னு தொடர்ந்து யோசிச்சேன்… அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டேன்

சௌதாம்டன் : கடந்த இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான தொடரின் முதல் போட்டியில் அந்த அணியின் முன்னணி பௌலர் ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப்படவில்லை. இரண்டாவது மற்றும் 3வது போட்டிகளில் சேர்க்கப்பட்ட நிலையில், தனது 500 விக்கெட்டுகள் சாதனையை அவர் எட்டினார். இந்நிலையில் முதல் போட்டியில் தான் சேர்க்கப்படாததால் ஓய்வு அறிவித்து விடலாமா என்று தான் தொடர்ந்து யோசித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் 117 நாட்களுக்கு பிறகு கடந்த 8ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கி நடைபெற்றது. இந்த தொடரில் 3க்கு 2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்தின் முன்னணி பௌலர் ஸ்டூவர்ட் பிராட் சேர்க்கப்படாத நிலையில், இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள்…

Read More

சிவகாசி கொரோனா தொற்றுகள்

ஆகஸ்ட் 2 – இன்று நம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 51 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக கண்டறியப்பட்டுள்ள தொற்றுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம். நரிக்குளம் – 1 பனையடிப்பட்டி – 1 வல்லம்பட்டி – 3 புல்லகவுண்டன்பட்டி – 5 பேராபட்டி – 32 அனுப்பன்குளம் – 4 தனியார் பட்டாசு ஆலை – 1 பாண்டியன் நகர், திருத்தங்கல் – 2 நடுவப்பட்டி – 1 மீனம்பட்டி – 1

Read More

ஆடிப் பெருக்கு 18

இந்த ஆடிப் பெருக்குத் திருநாளில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், உங்கள் வாழ்வில் குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் மனமாற வாழ்த்துகிறேன்.

Read More

ஆடிப் பெருக்கு 18

இந்த ஆடிப் பெருக்குத் திருநாளில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், உங்கள் வாழ்வில் குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் மனமாற வாழ்த்துகிறேன். என்றும் கழகப்பணி ஆற்றும் S.V.சீனிவாசன் B.Com சாத்தூர் சட்டமன்ற தொகுதி, திராவிட முன்னேற்ற கழகம் …

Read More