இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களை போற்றி வணங்குகிறோம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆசான், என்றும் எங்கள் தலைவர், செம்மொழி நாயகன், டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களை போற்றி வணங்குகிறோம்🙏… என்றும் நீங்கா நினைவுகளுடன் S.V.சீனிவாசன் சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம்

Read More

8:8:2020: பிறந்தநாள் காணும் எந்நாளும் எங்கள் அமைச்சர்

8:8:2020: பிறந்தநாள் காணும் எந்நாளும் எங்கள் அமைச்சர் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி KKSSR ராமசந்திரன் MLA அவர்களை வணங்கிறேன் என்றும் கழகப்பணி ஆற்றும் S.V.சீனிவாசன் B.Com சாத்தூர் சட்டமன்ற தொகுதி, திராவிட முன்னேற்ற கழகம்….

Read More

சிவகாசி கொரோனா தொற்றுகள்

ஆகஸ்ட் 3 – இன்று நம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 புதிய கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. புதிதாக கண்டறியப்பட்டுள்ள தொற்றுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவரம். ஆனைக்கூட்டம் – 2 ஆலாவூரணி, திருத்தங்கல் – 1 சிவகாசி நகரம் – 3 சோலை காலனி – 1 திருத்தங்கல் நகரம் – 1 பி.கே.எஸ். ரோடு – 1

Read More

சிவகாசி நகராட்சியில் வீடு வீடாக தொற்று பரிசோதனை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நகராட்சிப் பகுதிகளில், ஒவ்வொரு வார்டுகளிலும் வீடு வீடாக சென்று, வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு பணிகளை கண்காணித்து வருகிறார். சிவகாசி நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகள், அரிமா சங்கம், பசுமை அமைப்பு நிறுவனங்கள் இணைந்து கொரோனா இல்லாத சிவகாசி என்ற மருத்துவ முகாமை, நகராட்சியின் முப்பத்தியிரண்டு வார்டுகளிலும் நடத்தி வருகின்றனர். கடந்த பனிரெண்டு நாட்களில் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், சுகாதாரத்துறையினர், தொண்டு நிறுவன தன்னார்வலர்கள் பத்து பேர் கொண்ட குழுக்களாக சென்று கணக்கெடுக்கும் பணிகளும், வீடு வீடாக சென்று தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் வெப்ப நிலை பரிசோதனையும், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸி மீட்டர் கருவி மூலம், ஆக்ஸிஜன் அளவும் பரிசோதிக்கப்பட்டது. ஏழு கோவில் தெரு பகுதியில் 450…

Read More

திருக்குறளை புதுப்பிக்கும் சிவகாசி இயக்குனர்

திருக்குறளை புதுப்பிக்கும் சிவகாசி இயக்குனர் திருக்குறளை எளிதில் புரிய வைக்கவும், மனப்பாடம் செய்யவும் ஒலி ஒளி வடிவில் உருவாக்கி வருகிறார் சிவகாசி காமராஜர்புரம் காலனியை சேர்ந்த மனோகர் 66. குறும்பட இயக்குனரான இவர் திருக்குறள் மேல் உள்ள பற்றால் ‘குறள் பரதம்’ என்ற பெயரில் இந்த முயற்சியை எடுத்துள்ளார்.பரதம் கற்ற மாணவிகளை கொண்டு ஒவ்வொரு திருக்குறளுக்கும் தனித்தனியாக நடனம் ஆட வைத்து பதிவு செய்துள்ளார். இந்த பரதத்தின் சிறப்பு என்னவென்றால் திருக்குறளை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்காக தனி அரங்கம் ஏற்பாடு செய்து முறையாக பயிற்சி பெற்ற பரத கலைஞரின் வழிகாட்டுதலில் இம்முயற்சி எடுத்து வருகிறார். பின்னனி இசையுடன் திருக்குறளை கேட்கும் போது மனதில் எளிதில் பதிந்து விடுகிறது. கொரோனா ஊரடங்கால் தற்போது இப்பணி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இசையுடன் இதுவரை 33 திருக்குறளை உருவாக்கி உள்ளார். ஊரடங்கு…

Read More

ராஜபாளையத்தில் மக்களின் மருத்துவர்

ராஜபாளையத்தில் கரோனாவால் உயிரிழந்த மக்களின் மருத்துவர்: தன்னலமற்ற சேவையால் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் இறந்தார். அவரது பிரிவை தாங்க முடியாமல் பொதுமக்கள் பலர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச்சேர்ந்தவர் மருத்துவர் சாந்திலால் (67). மதுரையைச் சேர்ந்த இவர், ராஜபாளையத்தில் 40 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வந்தார். இவரது மனைவிசுந்தரி. கடந்த 2015-ல் மாரடைப்பால் இறந்தார். இவர்களது ஒரே மகள் சுப்ரியா, திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கிறார்.கரோனா தொற்றுஇந்நிலையில், மருத்துவர் சாந்திலாலுக்கு கடந்த 10-ம் தேதிமூச்சுத்திணறல் ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து ராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில்…

Read More

மன அழுத்தம் குறைக்கும் காய்கறி, மூலிகை தோட்டம்

சிவகாசி:கோடை முடிந்தும் வெயில் கொளுத்தும் இந்நேரங்களில் மரங்களின் தேவை இன்றியமையாதது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். அது எந்தளவிற்கு உண்மை என்பதை வெயிலில்தான் உணர முடிகிறது. மழை பொழிய மரங்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல் மன நிம்மதிக்கு வீட்டில் செடிகள் வளர்த்தலும் அவசியம். தற்போது பெரும்பாலானவர்கள் செடிகளின் அருமை உணர்ந்து மாடி தோட்டம், வீட்டின் காலி மனையில் தோட்டம் அமைத்து பராமரிக்கின்றனர். பலர் புதிதாக வீடு கட்ட துவங்கும்போதே செடிகளையும் நட்டு வளர்க்கிறார்கள். இதோடு வீட்டிலேயே மூலிகை செடிகளை வளர்க்கவும் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதை வீட்டிலேயே வளர்ப்பதால் சுத்தமான காற்று கிடைக்கிறது. அந்த வகையில் வீடு, தோட்டங்களில் பூச்செடி, காய்கறி, மூலிகை செடிகள் நட விரும்புவர்களுக்கு சிவகாசி காந்தி ரோட்டிலுள்ள ‘ஸ்டெம் ரிசர்ச் ட்ரேடிங்’ நடத்தி வரும் யாமினி ரத்னா குறைந்த விலையில்…

Read More

மரபணு மாற்று பயிர் பரிசோதனை: பாரதிய கிசான் சங்கம் எதிர்ப்பு

விருதுநகர்:மரபணு மாற்று பயிர் பரிசோதனைக்கு பாரதிய கிசான் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சங்க தேசிய செயலர் பெருமாள் கூறியதாவது:விவசாயிகளின் விளை பொருட்களை வியாபார கம்பெனிகள் வாங்கும்போது அரசு நிர்ணயித்த விலையை உறுதி செய்ய வேண்டும். இதற்காக விளை பொருட்களுக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்குவதில் வங்கி உத்திரவாதத்துடன் வியாபார கம்பெனிகள் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தை மத்திய, மாநில அரசுகளிடம் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள், வியாபாரிகள் இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்க்க மாவட்டம் தோறும் விவசாய தீர்ப்பாயம் ஏற்படுத்த வேண்டும். வேளாண் உற்பத்தி விற்பனை அவசர சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.பாரம்பரிய வேளாண் விளை பொருள் உற்பத்தியை பாதிக்கும் மரபணு மாற்று பயிர்களை பரிசோதனை அடிப்படையில் கூட மேற்கொள்ள கூடாது, என்றார்.

Read More

வேருடன் அகற்றப்பட்ட மரங்கள் மாற்று இடத்தில் நட்டு பராமரிப்பு

விருதுநகர்:முன்பு சாலை அமைக்கும் முன் இருபுறமும் பலன் தரும் மரக்கன்றுகளை நடுவர்.சாலை அமைக்கப்பட்ட பின் மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து பசுமை போர்வை போர்த்தியது போல் நிழல் தரும்.வாகனத்தில் செல்லும் போது பயண களைப்பு தெரியாது குளுமையான பயணஅனுபவத்தை பெறலாம். தற்போது இது அனைத்தும் தலைகீழாக உள்ளது.சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்படும் ஒரு மரத்திற்கு பதிலாக 12 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இன்று வரை ஏட்டளவிலே பின்பற்றப்படுகிறது.ஆனால் பொதுப்பணித்துறை இதை மிக அழகாக கையாண்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிக்காக அங்கிருந்த 46 மரங்களை வேருடன் எடுத்து கலெக்டர் அலுவலகம் யொட்டி கட்டட பணி நடத்து வரும் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடப்பட்டுள்ளன. இதற்காக கோவை பாரதியார் பல்கலை மரங்கள் மறுவாழ்வு திட்ட இயக்குனர் சையது ஆலோசனைப்படி மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு மண்…

Read More