மரபணு மாற்று பயிர் பரிசோதனை: பாரதிய கிசான் சங்கம் எதிர்ப்பு

விருதுநகர்:மரபணு மாற்று பயிர் பரிசோதனைக்கு பாரதிய கிசான் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சங்க தேசிய செயலர் பெருமாள் கூறியதாவது:விவசாயிகளின் விளை பொருட்களை வியாபார கம்பெனிகள் வாங்கும்போது அரசு நிர்ணயித்த விலையை உறுதி செய்ய வேண்டும். இதற்காக விளை பொருட்களுக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்குவதில் வங்கி உத்திரவாதத்துடன் வியாபார கம்பெனிகள் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தை மத்திய, மாநில அரசுகளிடம் பதிவு செய்ய வேண்டும்.

விவசாயிகள், வியாபாரிகள் இடையே பிரச்னை ஏற்பட்டால் அதை தீர்க்க மாவட்டம் தோறும் விவசாய தீர்ப்பாயம் ஏற்படுத்த வேண்டும். வேளாண் உற்பத்தி விற்பனை அவசர சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.பாரம்பரிய வேளாண் விளை பொருள் உற்பத்தியை பாதிக்கும் மரபணு மாற்று பயிர்களை பரிசோதனை அடிப்படையில் கூட மேற்கொள்ள கூடாது, என்றார்.

Related posts

Leave a Comment