வேருடன் அகற்றப்பட்ட மரங்கள் மாற்று இடத்தில் நட்டு பராமரிப்பு

விருதுநகர்:முன்பு சாலை அமைக்கும் முன் இருபுறமும் பலன் தரும் மரக்கன்றுகளை நடுவர்.சாலை அமைக்கப்பட்ட பின் மரக்கன்றுகள் நன்கு வளர்ந்து பசுமை போர்வை போர்த்தியது போல் நிழல் தரும்.வாகனத்தில் செல்லும் போது பயண களைப்பு தெரியாது குளுமையான பயணஅனுபவத்தை பெறலாம்.

தற்போது இது அனைத்தும் தலைகீழாக உள்ளது.சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்படும் ஒரு மரத்திற்கு பதிலாக 12 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது இன்று வரை ஏட்டளவிலே பின்பற்றப்படுகிறது.ஆனால் பொதுப்பணித்துறை இதை மிக அழகாக கையாண்டுள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிக்காக அங்கிருந்த 46 மரங்களை வேருடன் எடுத்து கலெக்டர் அலுவலகம் யொட்டி கட்டட பணி நடத்து வரும் மருத்துவ கல்லுாரி வளாகத்தில் நடப்பட்டுள்ளன.

இதற்காக கோவை பாரதியார் பல்கலை மரங்கள் மறுவாழ்வு திட்ட இயக்குனர் சையது ஆலோசனைப்படி மரங்களின் கிளைகள் வெட்டப்பட்டு மண் அள்ளும்இயந்திரம் மூலம் மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்தனர். இவற்றில் வெயில் தாக்கம் ஏற்படாமல் தடுக்க வெட்டப்பட்ட இடங்கள் ஈரச்சாக்கு மூலம் போர்த்தப்பட்டு தினமும் தண்ணீர் ஊற்ற தற்போது மரங்கள் துளிர்விட்டுள்ளன.மருத்துவ கல்லுாரி கட்டுமானப்பணி நிறைவு பெற்றதும் இம்மரங்கள் செழிப்பாக வளர்ந்துகாட்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை.

Related posts

Leave a Comment