#IAS#IASTopper#தமிழ்நாடு#TamilNadu

ஐ.ஏ.எஸ். தேர்வில் நாகர்கோவிலைச் சேர்ந்த மாணவர் கணேஷ்குமார் பாஸ்கர் தமிழக அளவில் முதலிடத்தையும் இந்திய அளவில் ஏழாவது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளது பெருமைக்குரிய செய்தி. மேலும் இந்த தேர்வில் வென்று மக்கள் சேவை ஆற்றவிருக்கிற தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது பாராட்டுகள்! வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட மாணவர்கள் அடுத்த தேர்வில் வாகை சூட வாழ்த்துகள்!

Read More

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் தமிழகத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 6501 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,349 ஆக உயர்ந்துள்ளது. குறைவான பரிசோதனை தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52955 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 5,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 27,86,250 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 2,68,285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மிக அதிக டிஸ்சார்ஜ் தமிழகத்தில் ஒரே நாளில் இன்று 6501 பேர் மருத்துவமனையில் இருந்து…

Read More

19 பவுண்டரி.. அதிரடி சதம் அடித்து டீமை காப்பாற்றிய கேப்டன் மார்கன்.. வாய்ப்பை நழுவ விட்ட இங்கிலாந்து

சௌதாம்ப்டன் : இங்கிலாந்து – அயர்லாந்து இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டி சௌதாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் விக்கெட்களை இழந்தாலும் அதிரடி ஆட்டம் ஆடியது. பின் மீண்டும் விக்கெட்களை இழந்து 350 ரன்கள்குவிக்கும் வாய்ப்பை இழந்தது. விக்கெட் வீழ்த்தினாலும் இங்கிலாந்து அணி ரன் குவித்த வேகத்தால் திக்கித் திணறியது அயர்லாந்து அணி. மூன்றாவது போட்டி இங்கிலாந்து – அயர்லாந்து அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. தொடரையும் கைப்பற்றி உள்ளது. டாஸ் வெற்றி இந்த நிலையில், கடைசி போட்டியிலாவது அயர்லாந்து ஆறுதல் வெற்றி பெறுமா? என்ற கேள்வியுடன் மூன்றாவது ஒருநாள் போட்டி துவங்கியது.…

Read More

IT ஊழியர்களுக்கு காத்திருக்கும் அடுத்தடுத்த சவால்கள்! இப்போதைக்கு 20,000 ஹெட் கவுண்ட் சரிவு!

இந்திய பொருளாதாரத்தில், அடுத்த கியரைப் போட்டு, எல்லாவற்றையும் வேகப்படுத்திய எளிமைப்படுத்திய பெருமை, இந்திய ஐடி துறைக்கே சேரும். இன்று நாம் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு வங்கியில் பணம் அனுப்புவது, விமான டிக்கெட் புக் செய்வது, ரயில் டிக்கேட்டை ரத்து செய்வது, நெட்ஃப்ளிக்ஸில் படம் பார்ப்பது என எல்லாமே ஐடி கொடுத்த வரம். அப்படிப்பட்ட முக்கிய துறையாக இருக்கும் ஐடி துறையில், மேற்கொண்டு ஐடி ஊழியர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் வருவதும், இருக்கும் ஊழியர்களுக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது சவாலாகவே இருக்கிறது. முக்கிய கம்பெனிகள் இந்தியாவின் ஐடி துறையில் சுமாராக 50 லட்சம் பேர் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். டாடா கன்சல்டன்சி சர்விசஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், டெக் மஹிந்திரா, காக்ணிசண்ட் போன்ற பெரு நிறுவனங்கள் மட்டுமே சுமாராக 13…

Read More

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! AICTE அதிரடி!

கொரோனா ஊரடங்கின் காரணமாக அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களை திறக்கமுடியாத சூழல் நிலவி வரும் நிலையில் பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொறியியல் கல்லூரிகளுக்கான எவ்வித அறிவிப்பும் வெளிவராத நிலையில், தற்போது ஆகஸ்ட் 16ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளை திறக்கலாம் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) அறிவுறுத்தியுள்ளது. AICTE கூட்டத்தில் முடிவு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (AICTE) 62-வது கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என ஏற்கனவே தகவல் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அந்தத் திட்டத்திற்கு மாற்றாக புதிய அறிவிப்பை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது. புதிய…

Read More

25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..!

இந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கியத் தூண் ஆக விளங்கும் ஐடி துறையைக் கொரோனா தொற்று தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையில்லை. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் ஐடி சேவைத் துறை புதிய வர்த்தகம் எதுவும் கிடைக்காமல் தடுமாறி வருகிறது. இதனால் அடுத்தடுத்த காலாண்டு வரையில் ஐடி நிறுவனங்களின் வர்த்தகம், வருவாய், லாப அளவீடுகள் அனைத்தும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்புக் காரணமாக இந்தியா முழுவதும் இருக்கும் ஐடி ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐடி நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்க ஊழியர்களுக்கு நிரந்தரமாகவே வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கக் கடந்த சில மாதங்களாகவே ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா முக்கியமான முடிவை எடுத்துள்ளது. ஐடி நிறுவனங்கள்…

Read More

எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது.. ராமர் கோவில் குறித்து அத்வானி!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு நாளை அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இது தனக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு வரலாற்று மற்றும் உணர்ச்சிபூர்வமான நாள் என்று கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக 1990 ல் சோம்நாத் முதல் அயோத்தி வரை ராம ரத யாத்திரை மேற்கொண்டவர் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி. இன்றைய நவீன பாஜகவிற்கு அடித்தளம் அமைத்து உருவாக்கியவர் அத்வானி தான். அயோத்தியல் ராமர் கோயில் அமைவதற்கு காரண கார்த்தாவாகவும் திகழ்ந்தவர் ஆவார். எல் கே அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீ ராம் மந்திரம் இந்தியாவை ஒரு வலுவான, வளமான, அமைதியான மற்றும் இணக்கமான தேசமாக பிரதிநிதித்துவப்படுத்தும் என்று நம்புகிறேன். மேலும் யாரையும் ஒதுக்கி வைக்காமல் அனைவருக்கும் நீதி…

Read More

எஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில் சேர ஆர்வமுடன் உள்ளவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள். பாரத ஸ்டேட் வங்கியில் 3850 Circle Based Officer வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30, ( 2.8.1990க்கு பின் பிறந்திருக்க வேண்டும்) . அதாவது 1.8.2020 அன்று 30வயதை எட்டியவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டவர்கள், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வயது சலுகை உண்டு. காலிப்பணியிட விவரம் 3850 (சென்னையில் 550, அஹமதாபத்தில் 750, பெங்களூருவில் 750, ஹைதராபாத்தில் 550, போபாலில் 296, மகாராஷ்டிராவில் 517 பணியிடங்கள் உள்ளன. சம்பள விவரம் ரூ. 23,700/- தேர்வு ஆன்லைன் வாயிலாகவும்…

Read More

திமுக அறக்கட்டளை

சிவகாசி ஒன்றிய திமுக துணைச் செயலாளர் திருமதி பூங்கோதை கந்தசாமி அவர்களின் மருத்துவ செலவிற்காக திமுக அறக்கட்டளையின் சார்பாக தலைவர் #தளபதியார் அவர்கள் 25000 ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளார் அதனை ஒன்றியக்குழு துணைத்தலைவர் #V.#விவேகன்ராஜ் அவர்கள் வழங்கினார்..

Read More