எஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வங்கி பணியில் சேர ஆர்வமுடன் உள்ளவர்கள் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த அறிவிப்பை பயன்படுத்தி ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பித்து விடுங்கள்.

sbi Circle Based Officer jobs. how to apply online

பாரத ஸ்டேட் வங்கியில் 3850 Circle Based Officer வேலைக்கு விருப்பமும் தகுதியும் உள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30, ( 2.8.1990க்கு பின் பிறந்திருக்க வேண்டும்) . அதாவது 1.8.2020 அன்று 30வயதை எட்டியவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டவர்கள், எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு வயது சலுகை உண்டு.

காலிப்பணியிட விவரம் 3850 (சென்னையில் 550, அஹமதாபத்தில் 750, பெங்களூருவில் 750, ஹைதராபாத்தில் 550, போபாலில் 296, மகாராஷ்டிராவில் 517 பணியிடங்கள் உள்ளன.

சம்பள விவரம் ரூ. 23,700/-

தேர்வு ஆன்லைன் வாயிலாகவும் , நேர்முகத்தேர்வு முறையிலும் நடைபெறும். https://www.sbi.co.in/web/careers அல்லது https://bank.sbi/web/careers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.08.2020

கல்வி தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்ப கட்டணம் General/ EWS/ OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 750/- SC/ ST/ PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை

விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியவை

i. சமீபத்திய புகைப்படம்

ii. கையெழுத்துடன் புகைப்படம்

iii. உங்கள் அடையாள சான்று,

iv. பிறந்த சான்றிதழ் சான்று

v. உங்களுடைய பயோ டேட்டா (பிடிஎப் பைல்)

vi. கல்வி சான்றிதழ்கள்

முதுகலை சான்றிதழ்கள் (eg. MBA, CA, CFA, ICWA etc.),

iii. JAIIB/ CAIIB சான்றிதழ் (இருந்தால்),

ix. அனுபவ சான்றிதழ் (Experience certificates (PDF),

x. Form-16/ Salary Slip (PDF),

xi. 10th or 12th வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள

https://www.sbi.co.in/documents/77530/400725/26072020_CBO+-+Detailed+Ad+%28Eng%29.pdf/27ad9d65-27a8-34f7-080e-87e3804f4bbf?t=1595750155565

Related posts

Leave a Comment