25-30% ஊழியர்களுக்கு நிரந்தரமாக Work From Home.. டெக் மஹிந்திரா, டிசிஎஸ், HCL அதிரடி முடிவு..!

இந்திய பொருளாதாரத்திலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கியத் தூண் ஆக விளங்கும் ஐடி துறையைக் கொரோனா தொற்று தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையில்லை. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் ஐடி சேவைத் துறை புதிய வர்த்தகம் எதுவும் கிடைக்காமல் தடுமாறி வருகிறது. இதனால் அடுத்தடுத்த காலாண்டு வரையில் ஐடி நிறுவனங்களின் வர்த்தகம், வருவாய், லாப அளவீடுகள் அனைத்தும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பாதிப்புக் காரணமாக இந்தியா முழுவதும் இருக்கும் ஐடி ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஐடி நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்க ஊழியர்களுக்கு நிரந்தரமாகவே வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி கொடுக்கக் கடந்த சில மாதங்களாகவே ஆலோசனை செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா முக்கியமான முடிவை எடுத்துள்ளது.

ஐடி நிறுவனங்கள் கொரோனாவுக்கு முன்பு அமெரிக்க அரசு விதித்து வந்த தொடர் கட்டுப்பாடுகளால் அமெரிக்க வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் பல்வேறு மாற்றங்களை இந்திய ஐடி நிறுவனங்கள் செய்து வந்தது. இதனால் ஐடி நிறுவனங்கள் வெளிநாட்டு வர்த்தகத்தை எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து நடத்த அதிகளவிலான செலவினங்களை எதிர்கொண்டது. இதைச் சமாளித்து வெளியில் வருவதற்குள் கொரோனா ஐடி துறையைப் புரட்டிப்போட்டுள்ளது.

மோசமான நிலை கொரோனா பாதிப்பால் இந்திய ஐடி நிறுவனங்கள் புதிய வர்த்தகம் கிடைக்காமலும், ஏற்கனவே திட்டமிட்டு இருந்த வர்த்தகங்கள் கைநழுவிப் போவதும், இயங்கிக்கொண்டு இருக்கும் வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் நிலையை எதிர்கொண்டு வருகிறது.

Work From Home

Work From Home இந்நிலையில் கையில் இருக்கும் வர்த்தகத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும், தொடர்ந்து வர்த்தகத்தை நிலைநாட்டவும் இந்திய ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டில் இருந்தே பணியாற்றும் சலுகை கொடுக்கப்பட்டது.

முதல் முறையாக வரலாற்றில் முதல் முறையாக 100 சதவீத ஊழியர்களும் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் இக்காலகட்டத்தில் வர்த்தகத்திலும் தினசரி வேலைகளிலும் எவ்விதமான பாதிப்பும் இல்லை என ஐடி நிறுவனங்கள் கூறுகிறது. இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஐடி நிறுவனங்கள் தங்களது பெரும் செலவின சுமையான அலுவலகக் குத்தகை அல்லது வாடகையைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

டெக் மஹிந்திரா

டெக் மஹிந்திரா இதன் படி டெக் மஹிந்திராவின் தலைமை நிதியியல் அதிகாரியான மனோஜ் பட் கூறுகையில், லாக்டவுன் முடிந்த பின்பு சுமாரப் 25 முதல் 30 சதவீத ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற நிறுவன கொள்கைகளும், வசதிகளையும் மாற்றி அமைக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்புதிய மாற்றம் மூலம் பல திறமைகளை நிறுவனத்திற்குள் கொண்டு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் 2021ஆம் ஆண்சு மார்ச் அல்லது ஜூன் மாதத்தில் நிகழும் எனத் தெரிவித்துள்ளார் மனோஜ் பட்.

டிசிஎஸ்

டிசிஎஸ் இதேபோல் 4.4 லட்சம் பேர் பணியாற்றும் டிசிஎஸ் நிறுவனத்தில் 25 சதவீதம் பேருக்கும், ஹெச்சிஎல் நிறுவனத்தில் 50 சதவீத பேருக்கும் நிரந்தரமாக Work From Home கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்போசிஸ் மற்றும் பிற நிறுவனங்கள் Work From Home குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.

டிசம்பர் 31 ஏற்கனவே மத்திய அரசு ஐடி துறையைச் சார்ந்த நிறுவனங்களுக்கு டிசம்பர் 31 வரையில் ஊழியர்கள் Work From Homeல் பணியாற்ற அனுமதி கொடுத்துள்ள குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment