தமிழகத்தில் இன்று கொரோனாவால் 5,063 பேர் பாதிப்பு.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. மிகப்பெரிய மாற்றம்!

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் தமிழகத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில் 6501 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 5,063 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 2,68,285 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 108 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,349 ஆக உயர்ந்துள்ளது.

குறைவான பரிசோதனை தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 52955 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 5,063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 27,86,250 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் 2,68,285 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று மிக அதிக டிஸ்சார்ஜ் தமிழகத்தில் ஒரே நாளில் இன்று 6501 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவாகும். அதாவது தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட சுமார் 1450க்கும் அதிகமானோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் இருந்து 208,784 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா ஆக்டிவ் நோயாளிகளாக 55,152 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

குறைந்தது பாதிப்பு மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் இன்று ஒரே நாளில் 1023 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,02,982 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று ஒரே நாளில் 1143 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூரில் உயர்வு சென்னையை தவிர பிற மாவட்டங்களில் அதிக பாதிப்பு என்றால், விருதுநகர் மாவட்டத்தில் 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 358 பேரும், தேனியில் 292 பேரும், செங்கல்பட்டில் 245 பேரும், காஞ்சிபுரத்தில் 220 பேரும், கோவையில் 228 பேரும், கடலூரில் 264 பேரும், கள்ளக்குறிச்சியில் 149 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment