சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து!

சென்னை: நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் சின்னி ஜெய்ந்த். ரஜினி, கமல், பிரபு, கார்த்தி, சத்தியராஜ், முரளி என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார் சின்னி ஜெயந்த். சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி இந்நிலையில் தனது மகனால் பெருமையடைந்துள்ளார் சின்னி ஜெயந்த். அதாவது சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ரசிகர்கள் வாழ்த்து இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு 829 தேர்ச்சி பெற்றுள்ளனர்.…

Read More

உடற்பயிற்சி கூடங்கள் இன்று முதல் திறப்பு

புதுடில்லி : கொரோனா பரவலை தடுக்க, ஐந்து மாதங்களுக்கு முன் மூடப்பட்ட உடற் பயிற்சிக் கூடங்கள், யோகா மையங்கள் ஆகியவை இன்று(ஆக.,5) முதல் இயங்க, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், உடற் பயிற்சி கூடங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள, தமிழகம், மஹாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில், உடற்பயிற்சி கூடங்களை திறக்க தடை நீடிக்கிறது. இந்நிலையில், டில்லி தலைநகர் பிராந்தியத்தில், 40 உடற்பயிற்சி கூடங்களை நடத்தி வரும், அசீமா ராவ் கூறியதாவது: ஹரியானா, காசியாபாத் நகரங்களில், 19 உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்க உள்ளோம். அரசு உத்தரவுப்படி, உடற்பயிற்சி கூடத்தின் வாசலில், ‘சானிடைசர்’ எனப்படும் கிருமி நாசினி வைக்கப்படும். அவற்றை பயன்படுத்தி, கைகளை துாய்மைப்படுத்திக் கொண்ட பின், வெப்பமானி சோதனை நடத்தப்படும். ரத்தத்தில் ஆக்சிஜன்…

Read More

பார்வையற்ற மதுரை பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி

மதுரை: ஐ.ஏ.எஸ்., தேர்வில், மதுரையைச் சேர்ந்த, பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் வெற்றி பெற்று, சாதனை படைத்துள்ளார். மதுரை, மணி நகரத்தைச் சேர்ந்தவர், பூர்ண சுந்தரி, 25; பார்வையற்ற மாற்றுத் திறனாளி. இவரது தந்தை முருகேசன், விற்பனை பிரதிநிதி; தாயார் ஆவுடைதேவி, இல்லத்தரசி. பூர்ணசுந்தரி கூறியதாவது: முதல் வகுப்பு படிக்கும் போதே, பார்வை குறைபாடு ஏற்பட்டது. 2வது படிக்கும் போது, அறுவை சிகிச்சை செய்தும் பார்வை கிடைக்கவில்லை.விழிகள் போனால் என்ன? கல்வி என்ற ஒளியால் மகளை வழி நடத்துவோம் என, பெற்றோர், எனக்கு பாடங்களை வாசித்து காட்டுவர். பழைய டேப்ரிக்கார்டரில் பாடங்களை பேசி, ஒலிக்க விட்டு, படிக்க வைத்தனர். பள்ளி, கல்லுாரி தேர்வுகளின் போது நான் சொல்ல, சொல்ல ஆசிரியர்கள் தேர்வெழுதுவர். பிள்ளைமார் சங்க பள்ளியில் பிளஸ் 2 வரையும், பாத்திமா கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலமும் படித்தேன். மூன்று…

Read More

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி.. அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார்

டெல்லி: டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியை நிதியுதவியாக வழங்கியுள்ளார், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லி அரசின் பாபா சாஹேப் அம்பேத்கர் (பிஎஸ்ஏ) மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையளித்து வந்த, 28 வயதான டாக்டர் ஜோகிந்தர் சவுத்ரிக்கு கொரோனா தொற்று ஜூன் மாத இறுதியில் உறுதியாகியுள்ளது. ஆனால், ஒரு மாதம் தீவிர சிகிச்சை பெற்றும், கொரோனாவால் ஜோகிந்தர் சவுத்ரி உயிரிழந்தார் இந்த நிலையில், டெல்லி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டாக்டர் ஜோகிந்தர் சவுத்ரியின் குடும்பத்தினரை சந்தித்து ரூ. 1 கோடி நிதி உதவியாக வழங்கியுள்ளார். டாக்டர் சவுத்ரியின் தியாகம் மற்றும் டெல்லி மக்களுக்காக செய்த தியாகத்திற்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார். டாக்டர் சவுத்ரியின் குடும்பத்தை காப்பாற்ற டெல்லி அரசு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் அவர் கூறினார். “டாக்டர் சவுத்ரி கொரோனா தொற்று…

Read More

தமிழகத்தில் இந்தி கட்டாயமா? புதிய கல்விக் கொள்கைக்கு திடீரென மத்திய அரசு ஒப்புதல்!

புதிய தேசிய கல்விக் கொள்கைக்குக் கடந்த ஆண்டு முதல் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி தலைமையிலான அமர்வு, இந்தக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, வரும் ஜூலை 31ம் தேதி வரையில், பொது மக்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது திடீரென ஒப்புதல் அளித்திருப்பது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை மத்தியில் ஆளும் பாஜக அரசு கல்வித் திட்டத்தில் கட்டாயமான சில மொழிகளை திணிப்பதில் ஆரம்பம் முதலே முனைப்புக் காட்டி வருகிறது. குறிப்பாக, இந்த புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் மும்மொழிக் கல்வியைப் புகுத்த தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய தேசிய கல்விக் கொள்ளை குறித்து பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்கும் வகையில்,…

Read More

கொரோனா கற்றுத்தந்த பாடம்

விருதுநகர்:கொரோனா கோரத்தாண்டவம் முடிவுக்கு வராததால் அனைத்து தொழில்களும் முடங்கி வருகின்றன. போக்குவரத்து வசதி இல்லாததால் நீண்ட துாரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் எண்ணற்றோர் தவித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்கள் 75 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளது. எனினும் பஸ்கள் இயக்கப்படாததால் பெரும்பாலான நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. வேலைக்கு சென்றாலும் செல்லா விட்டாலும் செலவுகளை சமாளிக்க வேண்டிய தருணம் குடும்ப பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. வேலையிழந்த கணவன், மனைவி இருவரும் இணைந்து தள்ளு வண்டிகளில் பழங்கள், காய்கறிகளை தெருத்தெருவாக விற்று வருகின்றனர். இதன் மூலம் குறிப்பிட்ட வருமானம் கிடைக்கிறது. சிலர் சிற்றுண்டிகளை தயாரித்து விற்று வருகின்றனர். இப்படி அன்றாடம் ஏற்படும் குடும்ப செலவுகளை எதாவது ஒரு வழியில் சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலை ஏழை, நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது. பெண்கள் பலர் சுய தொழிலில் ஈடுபட்டு குறிப்பிட்ட வருமானம் ஈட்டி வருகின்றனர்.அந்த…

Read More

தொற்றால் மில் மூடல்

ஸ்ரீவில்லிபுத்துார்:இங்குள்ள சட்டைத்துணி தயாரிக்கும் மில்லில் 190க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நடத்தபட்ட மருத்துவ பரிசோதனையில் 43 பேருக்கு தொற்று உறுதியானதால் மில் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Read More