சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி..இந்திய அளவில் சாதனை படைத்த பிரபல நடிகரின் மகன்..குவியும் வாழ்த்து!

சென்னை: நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் சின்னி ஜெய்ந்த்.

ரஜினி, கமல், பிரபு, கார்த்தி, சத்தியராஜ், முரளி என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார் சின்னி ஜெயந்த்.

சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி

இந்நிலையில் தனது மகனால் பெருமையடைந்துள்ளார் சின்னி ஜெயந்த். அதாவது சின்னி ஜெயந்த்தின் மகன் ஸ்ருதன், சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்காக 2019-ம் ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

ரசிகர்கள் வாழ்த்து

இதில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு 829 தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலைியில் நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் ஜெயந்த் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75 வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

இரண்டாவது முயற்சி..

25 வயதாகும் ஸ்ருதன் ஜெய், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்துள்ளார். இதில் முதல் முறை எழுதிய தேர்வில் பின்னடைவை சந்தித்த ஸ்ருதன், இரண்டாவது முறை எழுதிய தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்ருதனுக்கு வாழ்த்து

ஸ்ருதன் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்றவர் ஆவார். ரசிகர்களும் திரைத்துறையினரும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற சின்னி ஜெயந்த் மகனுக்கு ஸ்ருதனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Related posts

Leave a Comment