சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி

ஆகஸ்ட் 6 – இன்று நம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிதாகக் கண்டறியப்பட்ட 40 கொரோனா தொற்றுகள் விவரம் :மீனாட்சிபுரம் – 3ஆனைக்கூட்டம் – 8பாண்டியன் நகர், திருத்தங்கல் – 1கிருஷ்ணம நாயக்கன்பட்டி – 1கோபி நாயக்கன்பட்டி – 2வெள்ளூர் – 3சிலைமலைப்பட்டி – 1அப்பைய நாயக்கன்பட்டி – 1கொத்தனேரி – 2வி.குமாரபுரம் – 3சுப்புலாபுரம் – 1கண்டுரெட்டிபட்டி – 1கவுண்டன்பட்டி – 1சீலைய நாயக்கன்பட்டி – 2விவேகானந்தர் காலனி – 1ராமு தெரு, திருத்தங்கல் – 1காவடியப்பன் கோவில் தெரு, திருத்தங்கல் – 1புது காலனி, சாட்சியாபுரம் – 1விஸ்வநத்தம் புதூர் – 1கண்டியாபுரம் – 5

Read More

தென் தமிழகத்தில் தொழில் தொடங்கினால் சென்னையில் அளிப்பதை விட அதிக சலுகை.. முதல்வர் அறிவிப்பு

மதுரை: தென் தமிழகத்தில் தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு சென்னையில் அளிப்பதை விட அதிக சலுகை வழங்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் நிலத்திற்கு மானியம் வழங்கப்படும் என்று. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து ஆய்வு நடத்தினார்.இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு முதல்வர் பேட்டி அளிக்கையில், “இ-பாஸ் முறையை எளிதாக்க கூடுதலாக ஒரு குழு அமைக்கப்படுகிறது. ஏற்கனவே ஒரு குழு அமைக்கப்பட்டு இருந்தது. இப்போது கூடுதலாக ஒரு குழு அமைக்கப்படுகிறது. 500 பேருக்கு பாஸ் கிடைத்திருந்தால் இனி கூடுதலாக இ-பாஸ் கிடைக்கும். தொழிற்சாலைகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு இ-பாஸ் வழங்க எந்த தடையும் இல்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸை பயன்படுத்த வேண்டும்.மக்களுக்கு இடையூறு செய்வதற்காக இ-பாஸ் முறை உருவாக்கப்படவில்லை.…

Read More

Rajapalayam Mla

இராஜபாளையம் தொகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையிலும் மற்றும் இராம்கோ பொறியியல் கல்லூரியிலும் அனுமதித்துள்ள நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முந்திரி, பாதம் கடலை பருப்பு, மாதுளை ஆரஞ்சு எலும்பிச்சை பேரீச்சம் பழம், உலர்திரட்சை, பிஸ்கெட் வகைகள், மஞ்சள் பொடி, ஏலக்காய் சுக்கு கிராம்பு, புத்துணர்ச்சிபானம், முக கவசம் மற்றும் தண்ணீர் கேன் உள்ளிட்ட 15 பொருட்களை 16.07.2020 முதல் இன்று 05.08.2020 வரை தொடர்ந்து MLA அவர்கள் வழங்கி வருகிறார் மேலும் இதுவரையில் 1253 கொரோனா நோயாளிகளுக்கு மேற்கண்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இன்று மேற்கண்ட பொருட்களை பார்சல் செய்வதை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் பார்வையிட்டு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் பொருட்களை தானே பார்சல் செய்து மருத்துவமனையில் புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ள…

Read More

Rajapalayam News 6-08-2020

இராஜபாளையம் தொகுதியில் நேற்று இரவு பலத்த காற்றால் பல தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது என விவசாயிகள் MLA அவர்களை தொலைபேசி தொடர்பு கொண்டு கூறியதையடுத்து MLA அவர்கள் வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட அழைத்தை அடுத்து, வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையா அவர்கள் வேளாண்மை அலுவலர் தனலட்சுமி அவர்கள் முன்னிலையில் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று 06.08.2020 சாய்ந்த தென்னை மரங்களை பார்வையிட்டார். ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு சாய்ந்த தென்னை மரங்களுக்கு இன்றுவரை அரசு இழப்பீடு வழங்கவில்லை என கூறியதையடுத்து RI முத்துராமலிங்கம் VAO மேனகா அவர்களிடம் இழப்பீடு தொகை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துவிட்டது அதனை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார் மேலும் தற்போது இழப்பீடு குறித்து…

Read More

சிவகாசிக்கு காலண்டர் தயாரிப்பு ஆர்டர்கள் வருவது தாமதம்

கொரோனா பரவலால் சிவகாசிக்கு காலண்டர் தயாரிப்பு ஆர்டர்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிவகாசி பகுதியில் தினசரி மற்றும் மாத காலண்டர் தயாரிக்கும் பணியில் வழக்கமாக 50-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் ஈடுபடும். ஒவ்வொரு ஆண்டும் 7-வது மாதத்தில் சிவகாசியில் உள்ள அச்சகங்களில் அடுத்த ஆண்டுக்குரிய காலண்டர் தயாரிப்பு தொடங்கும். ஆடிப்பெருக்கு அன்று வெளிமாநில மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் மொத்த வியாபாரிகளுக்கு அந்த ஆண்டுக்குரிய புதிய டிசைன் காலண்டர்கள் பார்வைக்கு வழங்கப்படும் இதை பெற்றுக்கொள்ளும் மொத்த வியாபாரிகள் புதிய ஆர்டர்களை சிவகாசியில் உள்ள அச்சகங்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை அச்சகங்கள் கடைபிடிப்பதால் போதிய பணியாளர்கள் இல்லாமல் காலண்டர் தயாரிப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆடிப்பெருக்கு அன்று வழக்கமாக நடைபெறும் புதிய டிசைன்கள் வெளியீட்டு விழாவும் நடக்கவில்லை.…

Read More

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்ற பார்வையற்ற பெண் மாற்றுத்திறனாளி

மனிதநேய பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்வீசஸ் தேர்வில் பார்வையற்ற பெண் மாற்றுத்திறனாளி பூர்ணசுந்தரி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை சரிசெய்வேன் அவர் தெரிவித்துள்ளார். சென்னை: மதுரை மணிநகரத்தை சேர்ந்தவர் கே.முருகேசன். தனியார் நிறுவனத்தில் விற்பனையாளர். இவருடைய மனைவி ஆவுடைதேவி. இந்த தம்பதியின் மூத்த மகள் பூர்ணசுந்தரி. இவர் 2019-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வில் கலந்துகொண்டு, அகில இந்தியஅளவில் 286-வது இடத்தை பிடித்து வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு 5 வயதில் ஏற்பட்ட பார்வை நரம்பு கோளாறு காரணமாக கண் பார்வையை இழந்தார். இருப்பினும் மனம் தளராமல் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி என்ற ஒற்றை இலக்கை விரட்டிப்பிடித்து சாதித்துள்ளார். இதுபற்றி பூர்ணசுந்தரி கூறியதாவது:- பார்வை இழந்ததை பெரிய கவலையாக நான் கருதவில்லை. அதை எனக்கு தெரியாத வகையில் எனது பெற்றோர் நன்றாக பார்த்துக்கொண்டனர். 2016-ம்…

Read More

இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களை போற்றி வணங்குகிறோம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆசான், என்றும் எங்கள் தலைவர், செம்மொழி நாயகன், டாக்டர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவர்களை போற்றி வணங்குகிறோம்🙏… என்றும் நீங்கா நினைவுகளுடன் S.V.சீனிவாசன் சாத்தூர் சட்டமன்ற தொகுதி திராவிட முன்னேற்றக் கழகம்

Read More

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும்: முதல்வர் மீண்டும் உறுதி

திண்டுக்கல்: தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும், அதில் மாற்றமில்லை என முதல்வர் இபிஎஸ் உறுதிபட தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் இபிஎஸ் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய பின்னர், நடுத்தர தொழில் பிரதிநிதிகள், விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் ஆகியோரை சந்தித்து உரையாற்றினார். அப்போது முதல்வர் பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் மாநில அரசு செய்கிறது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து இல்லை என்பதால், நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு செல்கின்றனர். மேலும் இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. பொது மக்களின் ஒத்துழைப்பால் தான் பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சிப் பணிகள்…

Read More

மோடியால் சாத்தியமானது: ஆதித்யநாத் பெருமிதம்

பூமி பூஜை நிகழ்ச்சியில், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித் துறையின் வலிமை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரச்னைக்கு, ஜனநாயக ரீதியிலும், அரசியல் சாசன முறையிலும், எவ்வாறு சிறப்பான முறையில் தீர்வு காணலாம் என்பது உலகுக்கு காட்டப்பட்டுள்ளது. மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் மதிநுட்பமே, ராமர் கோவில் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, 500 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் நடத்தி வந்த போராட்டங்களுக்கான பலன் தற்போது கிடைத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால், பூமி பூஜைக்கு பலரை அழைக்க முடியவில்லை. அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு, அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். ‘நாங்கள் உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளோம்’ ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன்…

Read More

‘கொரோனா இறப்பை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை’: விஜயபாஸ்கர்

சென்னை,; ”கொரோனா தொற்றுடன், நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் இறப்புகள் குறைவாகவே உள்ளன. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால், இறப்புகளை குறைக்க முடியும்,” என, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளுக்கு, நோயாளிகளை அழைத்து வர வசதியாக, 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம் மற்றும் மருத்துவ உபகரணங்களை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வழங்கினார்.பின், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கூடுதலாக, 1,000 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.1,000 படுக்கைகள்தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், ஏற்கனவே, 1,000 படுக்கைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கூடுதலாக, 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையில், இதுவரை, 15 ஆயிரம் கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.உணவு சாப்பிட சிரமப்படும் நோயாளிகளுக்கு, கவச உடை அணிந்து, உணவை ஊட்டி விடும்…

Read More