அயோத்தியில் ராமருக்கு கோயில்

விருதுநகர்:ராமர் பிறந்த அயோத்தியில் கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜையை தொடர்ந்து ஹிந்துக்கள் தங்களின் வீடுகள் தோறும் ராமர் படத்திற்கு வண்ணப் பூக்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

ஸ்ரீ ராமா ஜெயராம் ஜெய ஜெயராம் என மனம் உருகி வேண்டினர். கோயில்கள் முன்பு விளக்குகள் ஏற்றி வழிபட்டனர்.

ராஜபாளையம்: ராமர் , அனுமன் கோயில்களில் பக்தர்கள் விளக்கேற்றி ராமநாம ஜெபம் பாடி வழிபட்டனர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. வீடுகளிலும் விளக்கேற்றி வழிபட்டனர்.

* அருப்புக்கோட்டை: புளியம்பட்டி ஸ்ரீராமர் கோயிலில் பா.ஜ ., இளைஞரணி சார்பில் நடந்த சிறப்பு பூஜையில் மாவட்ட பொருளாளர் ராமஜெயம், செயலர் ஜெயராஜ், சமூக ஊடக பிரிவு தலைவர் பிரதீப் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்துார்:பா.ஜ., சார்பில் ராமர் படத்திற்கு விளக்கேற்றி மாநில செயற்குழு உறுப்பினர் சோலையப்பன் தலைமையில் கட்சியினர் இனிப்பு வழங்கினர். மாவட்ட ஐ.டி.,பிரிவு நிர்வாகி மாரிமுத்து, நகர தலைவர் இளங்கோசெல்வன் பங்கேற்றனர்.

* விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆஞ்சநேயர், முருகன் கோயில் வாசலில் மாநில நிர்வாகி சரவணகார்த்தி தலைமையில் விளக்கேற்றினர்.சிவகாசி: ஊடக பா.ஜ., சார்பில் பல்வேறு இடங்களில் விளக்கேற்றி வழிபட்டனர். ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி , விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பிலும் ராமர் படத்திற்கு விளக்கேற்றி வழிப்பட்டனர்.

Related posts

Leave a Comment