‘கொரோனா இறப்பை குறைக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை’: விஜயபாஸ்கர்

சென்னை,; ”கொரோனா தொற்றுடன், நுரையீரல் பாதிப்பால் ஏற்படும் இறப்புகள் குறைவாகவே உள்ளன. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால், இறப்புகளை குறைக்க முடியும்,” என, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளுக்கு, நோயாளிகளை அழைத்து வர வசதியாக, 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம் மற்றும் மருத்துவ உபகரணங்களை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வழங்கினார்.பின், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், கூடுதலாக, 1,000 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு வருவதையும் ஆய்வு செய்தார்.1,000 படுக்கைகள்தொடர்ந்து, அவர் அளித்த பேட்டி: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், ஏற்கனவே, 1,000 படுக்கைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கூடுதலாக, 1,000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மருத்துவமனையில், இதுவரை, 15 ஆயிரம் கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.உணவு சாப்பிட சிரமப்படும் நோயாளிகளுக்கு, கவச உடை அணிந்து, உணவை ஊட்டி விடும் அர்ப்பணிப்பு மிக்க நர்ஸ்கள் உள்ளனர். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை, தாமதிக்காமல் வார்டில் அனுமதிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கும் போதே, தொலைபேசியில் முன் அறிவிப்பு கொடுப்பது, ‘மைக் ஆடியோ சிஸ்டம், காணொலி காட்சி’ வசதியுடன், டாக்டர்கள், நர்ஸ்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.மருத்துவமனைக்கு வரும் முன், தொலைபேசியில் தகவல் தெரிவிப்பதன் வாயிலாக, தாமதமின்றி சிகிச்சை வழங்கப்படுகிறது. மாநிலம் முழுதும், 3,374 கர்ப்பிணியருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.இறப்பு குறையும்கொரோனா தொற்றுடன், நுரையீரல் பாதிப்பால் இறப்போர் எண்ணிக்கை, தினமும், 10க்கும் குறைவாகவே உள்ளது. மற்ற மரணங்கள் எல்லாம், பிற பல்வேறு நோய் பாதிப்புகளால் ஏற்பட்டவை. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால், கொரோனா இறப்புகளை குறைக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Related posts

Leave a Comment