சரி செய்யலாமே கிராமங்களில் ‘லோ வோல்ட்டேஜ்’ மின்சாரம் மின்சாதன பொருட்களும் பழுதாகும் அவலம்

விருதுநகர்:மாவட்டத்தில் கிராமங்களில் குறைந்த அழுத்த மின்சாரமே வருவதால் மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதன் மீது மின்வாரியம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்குள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராமங்களுக்கும் மின்சார வசதி உள்ளன. தெரு விளக்குகள், வீட்டு இணைப்புகள், விவசாய பம்ப் செட்டுகள் என பல பிரிவாக பிரித்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.

மின்வாரியமும் மாதம் ஒரு முறை பராமரிப்புக்காக மின்தடை ஏற்படுத்தி மின்மாற்றிகளை ஆய்வு செய்து சரி செய்வர். இருப்பினும் கிராமங்களில் மட்டும் ‘லோவோல்ட்டேஜ்’ ஆக மின்சாரம் வருவதால் மின்பல்புகள், பேன்கள் , டிவி,குளிர்சாதன பெட்டிகள் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன.

இரவு நேரங்களில் முழுமையான மின்சாரம் கிடைப்பதில்லை. பலத்த காற்று மழை பெய்தால் பலமணிநேரத்திற்கு மின்தடை ஏற்படுவதுண்டு. தரமான டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பிகளை அமைத்து கிராமபகுதிகளில் முழுமையான மின்சாரம் வழங்க மின் துறை முன் வர வேண்டும்.

பரமாரிப்பு அவசியம்

லோவோல்ட்டேஜ் பெரும் தொல்லையாக உள்ளது. இதனால் விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகின்றன. வீடுகளில் மின்சாதன பொருட்களும் பழுதாகின்றன. கிராம புறங்களில் முழுமையான மின்சாரம் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயபாரத்,

தனியார் ஊழியர்,விருதுநகர்.

Related posts

Leave a Comment