திறனை ஊக்குவிக்கும் புதிய கல்விக்கொள்கை: தேசிய ஆசிரியர் சங்கம் வரவேற்பு

ராஜபாளையம்:புதிய கல்விக்கொள்கையால் மாணவரின் தனித்திறன் வளர்வதுடன் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆக்கத்திறன் வளர்க்கப்படுவதாக தேசிய ஆசிரியர் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் சரவணச்செல்வன், பொருளாளர் இஞ்ஞாசி ராஜா கூறி உள்ளனர்.

அவர்களது அறிக்கை: மும்மொழித்திட்டத்தால் தாய் மொழி, அயல் மொழி தவிர ஹிந்தி, உருது, சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளை கற்கலாம். பிற மாநிலத்தவர்கள் குறிப்பாக உத்திரப்பிதேசத்தை சேர்ந்த மாணவர்கள் ஹிந்தி, ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் ஒன்றான தமிழ் கற்கலாம். இதனால் தமிழ் மொழி வளர்ச்சியடையுமே தவிர மொழிக்கு பங்கம் வராது. இடை நிற்றலுக்கு வழியே இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

Leave a Comment