மோடியால் சாத்தியமானது: ஆதித்யநாத் பெருமிதம்

பூமி பூஜை நிகழ்ச்சியில், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதித் துறையின் வலிமை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு பிரச்னைக்கு, ஜனநாயக ரீதியிலும், அரசியல் சாசன முறையிலும், எவ்வாறு சிறப்பான முறையில் தீர்வு காணலாம் என்பது உலகுக்கு காட்டப்பட்டுள்ளது.

மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் மதிநுட்பமே, ராமர் கோவில் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு கிடைப்பதற்கு வழிவகை செய்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு, 500 ஆண்டுகளாக பல்வேறு தரப்பினர் நடத்தி வந்த போராட்டங்களுக்கான பலன் தற்போது கிடைத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால், பூமி பூஜைக்கு பலரை அழைக்க முடியவில்லை. அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு, அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

Yogi Adityanath, Ayodhya, Ram Temple, Bhoomi pujan, Bhumi Pujan, Ram Janmabhoomi, Ram Mandir, PM, Modi, Narendra Modi

‘நாங்கள் உறுதிமொழியை நிறைவேற்றியுள்ளோம்’


ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவது என்ற உறுதிமொழியை, நீண்ட போராட்டங்களுக்குப் பின் நிறைவேற்றியுள்ளோம். ஆர்.எஸ்.எஸ்., தலைவராக இருந்த பாலாசாகேப் தியோரா, ’20 – 30 ஆண்டுகள் போராடினால் தான், இந்த உறுதிமொழியை நிறைவேற்ற முடியும்’ என, அப்போது எங்களிடம் கூறினார்.

தற்போது நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கிறது. பல நுாற்றாண்டு கனவு, நம்பிக்கை நிறைவேறியுள்ள திருப்தியில் மக்கள் உள்ளனர். அதைவிட, மக்களிடையேதன்னம்பிக்கை, தற்சார்பு போன்றவற்றை, இந்த தருணம் உருவாக்கியுள்ளது அதிக மகிழ்ச்சியை தருகிறது. இங்கு கோவில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக, பலர் தியாகங்களை செய்துள்ளனர்.

பா.ஜ., மூத்ததலைவர் அத்வானி, இந்த நிகழ்ச்சியை, தன் வீட்டில் இருந்து பார்த்து கொண்டிருப்பார் என்று நம்புகிறேன். அவர் இங்கு வந்திருக்க வேண்டும். அவரை போல பலர், கொரோனா சூழ்நிலையால், நேரில் வர முடியாமல் போனது. இவ்வாறு, அவர் பேசினார்.

வடிவமைத்தது யார்


?கட்டுமானத்துக்கான கடவுளாக கருதப்படும் விஸ்வகர்மாவின் வாரிசுகள் என்று கூறிக் கொள்ளும், சோம்புரா குடும்பத்தைச் சேர்ந்தவர்களே, ராமர் கோவிலை வடிவமைத்து உள்ளனர். குஜராத்தில் உள்ள சோம்நாத் கோவிலை கட்டிய பிரபுசங்கரின் பேரனான, சந்திரகாந்த் சோம்புரா, 77, தன் இளம் வயதில், தாத்தாவிடம் இருந்தும், தந்தையிடம் இருந்து, கோவில் வடிவமைப்பதை கற்றுக் கொண்டதாக கூறுகிறார்.

அயோத்தி கோவிலுக்கான வடிவமைப்பை, 30 ஆண்டுகளுக்கு முன்பே அவர் துவக்கிஉள்ளார். பிரபல தொழிலதிபர் கியான்ஷ்யாம்தாஸ் பிர்லா மூலம், வி.எச்.பி., அமைப்பின் தலைவராக இருந்த அசோக் சிங்கலை சந்தித்துள்ளார். பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பாகவே, ராமர் கோவிலுக்கு, அவர், 2 – 3 மாதிரிகளை உருவாக்கினார். அதில், வி.எச்.பி.,யால் இறுதி செய்யப்பட்ட மாதிரியே, தற்போது சில மாறுதல்களுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இவருடைய குடும்பத்தினர் நம் நாடு, வெளிநாடுகளில் என, 200க்கும் மேற்பட்ட கோவில்களை, வடிவமைத்து உள்ளனர்.

ராமர் கோவில் கட்டுமான பணிகளை, சந்திரகாந்த் சோம்புராவின் மகன், ஆஷிஷ், 49, கவனிக்க உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, கோவிலுக்கான மாதிரிகளை அவர் இறுதி செய்து உள்ளார். இந்தக் கோவிலைக் கட்டுவதற்கான ஒப்பந்தம், ‘லார்சன் அண்ட் டூப்ரோ’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. துவாரகா நகரை, பகவான் கிருஷ்ணருக்காக,

விஸ்வகர்மா வடிவமைத்ததாக கூறப்படுகிறது. மதுராவில் உள்ள கிருஷ்ண ஜமன்ஸ்தான் கோவிலை, பிரபுசங்கர் வடிவமைத்தார். தற்போது, அவருடைய பேரனான சந்திரகாந்த் சோம்புரா, அயோத்தி ராமர் கோவிலை வடிவமைத்துள்ளார்.

சந்திரகாந்தின் மகன்களான ஆஷிஷ், நிகில் மற்றும் நிகிலின் மகனான அஷுதோஷ் ஆகியோர் மேற்பார்வையில், ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. வெள்ளி கிரீடம் பரிசுபூமி பூஜைக்கு முன்பாக, பிரதமர் மோடி, அயோத்தியில் உள்ள ஹனுமன் கோவிலுக்கு சென்று, வழிபட்டார். அப்போது, ராமரின் பெயர் பொறிக்கப்பட்ட, வெள்ளியிலான கிரீடம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.


அறக்கட்டளை கருத்து:


ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திரா அறக்கட்டளையின் தலைவர், மகந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியதாவது: ராமருக்கான கோவில் விரைவில் கட்டப்பட்டு, அதை கண்குளிர பார்க்க வேண்டும் என்பது தான், கோடிக்கணக்கான ஹிந்துக்களின் விருப்பம், எதிர்பார்ப்பாக உள்ளது. பூமிபூஜை நடந்துள்ள நிலையில், மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.நாட்டின் வளர்சிக்காக செய்யப்படும் கட்டுமானப் பணிகளைப் போல, ராமர் கோவிலும், நம் நாட்டின் வளர்ச்சி மற்றும் உலகின் வளர்ச்சிக்கான திட்டமே. இது ஒரு பொது நலன் திட்டமாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Related posts

Leave a Comment