விருதுநகரில் தொற்று குறைகிறது சுகாதாரத்துறை செயலர் தகவல்

விருதுநகர்:’விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து உள்ளதாக,’ சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

விருதுநகரில் கலெக்டர் கண்ணன், எஸ்.பி., பெருமாள் முன்னிலையில் நடந்த கொரோனா நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: விருதுநகரில் ஜூலை 8 முதல் தொற்று அதிகரித்து வருகிறது. 361 பகுதிகளில் தான் தொற்று உள்ளது. அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர் பகுதிகளில் தடுப்பு பணிகளில் சவால் உள்ளது. 2348 முகாம்கள் நடத்தப்பட்டு 1.11 லட்சம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டது, என்றார்.

Related posts

Leave a Comment