Rajapalayam Mla

இராஜபாளையம் தொகுதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனையிலும் மற்றும் இராம்கோ பொறியியல் கல்லூரியிலும் அனுமதித்துள்ள நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முந்திரி, பாதம் கடலை பருப்பு, மாதுளை ஆரஞ்சு எலும்பிச்சை பேரீச்சம் பழம், உலர்திரட்சை, பிஸ்கெட் வகைகள், மஞ்சள் பொடி, ஏலக்காய் சுக்கு கிராம்பு, புத்துணர்ச்சிபானம், முக கவசம் மற்றும் தண்ணீர் கேன் உள்ளிட்ட 15 பொருட்களை 16.07.2020 முதல் இன்று 05.08.2020 வரை தொடர்ந்து MLA அவர்கள் வழங்கி வருகிறார் மேலும் இதுவரையில் 1253 கொரோனா நோயாளிகளுக்கு மேற்கண்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இன்று மேற்கண்ட பொருட்களை பார்சல் செய்வதை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் பார்வையிட்டு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் பொருட்களை தானே பார்சல் செய்து மருத்துவமனையில் புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ள 82 நோயாளிகளுக்கும் கல்லூரியில் புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ள 39 நோயாளிகளுக்கும் இன்று நண்பகல் 2 மணிக்கு அனுப்பி வைத்தார்.

Related posts

Leave a Comment