Rajapalayam News 6-08-2020

இராஜபாளையம் தொகுதியில் நேற்று இரவு பலத்த காற்றால் பல தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது என விவசாயிகள் MLA அவர்களை தொலைபேசி தொடர்பு கொண்டு கூறியதையடுத்து MLA அவர்கள் வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட அழைத்தை அடுத்து, வேளாண்மை உதவி இயக்குநர் சுப்பையா அவர்கள் வேளாண்மை அலுவலர் தனலட்சுமி அவர்கள் முன்னிலையில் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று 06.08.2020 சாய்ந்த தென்னை மரங்களை பார்வையிட்டார். ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு சாய்ந்த தென்னை மரங்களுக்கு இன்றுவரை அரசு இழப்பீடு வழங்கவில்லை என கூறியதையடுத்து RI முத்துராமலிங்கம் VAO மேனகா அவர்களிடம் இழப்பீடு தொகை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துவிட்டது அதனை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார் மேலும் தற்போது இழப்பீடு குறித்து விவசாயி நச்சாடலிங்கம் அவர்களிடம் MLA அவர்கள் கேட்கையில் எல்லா தென்னை மரங்களிலும் மட்டைகளும் தேங்காய்களும் விழுந்துவிட்டதால் ஒரு வருடத்திற்கு தேங்காய் விளைச்சல் இருக்காது அதற்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டுமென என கூறினார் அதற்கு MLA அவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள VAO அவர்களிடம் மனு அளிக்குமாறு அவர்கள் அந்தந்த பகுதிகளை பார்வையிட்டு இழப்பீட்டிற்குரிய மதிப்பீடு தயார் செய்து சென்னையில் உள்ள வேளாண்மைத் துறை அரசு செயலாளர் அவர்களுக்கு விரைவில் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார், பின் MLA அவர்கள் சென்னையில் உள்ள வேளாண்மைத் துறை அரசு செயலாளர் அவர்களிடம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார் அவர்களும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு இழப்பீட்டு தொகை வழங்குவதாக கூறினார்கள். மேலும் விவசாயமும் விவசாயிகளும் வளர வேண்டும் அதற்கு எப்போதும் திமுக துணை நிற்கும் என MLA அவர்கள் விவசாயிகளிடம் கூறினார். இந்நிகழ்வில்
RI முத்துராமலிங்கம் VAO மேனகா அவர்கள் பேரூர் கழக செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி அவர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

#DMKVirudhunagar

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை
படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

Related posts

Leave a Comment