எங்கெங்கும் கலைஞர்.. கருணாநிதி கொண்டு வந்த மகத்தான திட்டங்கள்.. இணையத்தில் சிலிர்க்கும் நெட்டிசன்கள்

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அவரின் சாதனைகளை இணையத்தில் நெட்டிசன்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள் .

திமுக முன்னாள் தலைவர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி இயற்கை எய்தினார். இன்று அவரின் நினைவுநாள். இதையடுத்து அரசியல் தலைவர்கள் பலர் கருணாநிதி குறித்து உருக்கமான டிவிட்களை செய்து வருகிறார்கள்.

கட்சி பேதம் இன்றி தலைவர்கள் பலர் கருணாநிதியின் சாதனைகளை நினைவு கூர்ந்து வருகிறார்கள். இணையத்தில் பலரும் கருணாநிதி குறித்து டிவிட் செய்து வருகிறார்கள்.

கருணாநிதியின் சாதனைகளை விளக்காகும் வகையில் தற்போது #எங்கெங்கும்கலைஞர் என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்து அவர் கொண்டு வந்த திட்டங்கள், அவர் செய்த சாதனைகள், எதிர்க்கட்சியில் இருந்து அவர் எதிர்த்த திட்டங்கள், இன்னும் எத்தனை வருடங்களுக்கு அவரின் திட்டங்கள் நம்மை வழி நடத்தும் என்று #எங்கெங்கும்கலைஞர் டேக்கில் பலரும் டிவிட் செய்து வருகிறார்கள்.

ஹேஸ்டேக்

பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் கருணாநிதியை நினைவு கூர்ந்து வருகிறார்கள். அவரின் சாதனையை பட்டியலிட்டு வருகிறார்கள். மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொடங்கி பல்வேறு மாநில முதல்வர்கள் கருணாநிதியின் நினைவு நாள் குறித்து டிவிட் செய்துள்ளனர். திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எல்லோரும் கருணாநிதியின் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

Related posts

Leave a Comment