கரிசல்காட்டிலும் வீசுது தென்றல்

விருதுநகர்பூமியில் அரை அடி மண் உருவாக ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும் என புவியியல் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.

கரும்பு அறுவடை முடிந்ததும் தோகைகள், சருகுகள் நிரந்த வயலை தீயிட்டு அழிப்பர். வயலுக்கு தீ வைப்பதால் மண்ணின் நுண்ணுாட்ட சத்துக்கள், மண் புழு உள்ளிட்ட நன்மை செய்யும் உயிரினங்கள் அழியும். மண் வளம் பெருக கரும்பு தோகைகள், சருகுகளை மண்ணுடன் மடக்கி உழவு செய்தால் மண்ணும், மகசூலும் பெருகும் என வேளாண் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதை முன் மாதிரியாக கொண்டுள்ள விருதுநகர் பாவாலி கிராமத்தினர் தங்களின் விளை நிலங்களில் வேம்பு, தேக்கு, புளியன், புங்கன் என பலன் தரும் மரங்களை பராமரிக்கின்றனர். இதன் மரங்களுக்கு நடுவே குடில்கள் அமைத்து வசிக்கின்றனர். கோடை வெயில் வாட்டினாலும் இவர்கள் ஜிலுஜிலு குளுகுளு சீதோஷ்ண நிலையை அனுபவிக்கின்றனர். குடில்களை சுற்றிலும் காய்கறிகள், கால்நடைகளையும் வளர்க்கின்றனர். வீட்டுக்கு தேவையான காய்கள், சுத்தமான பசும் பால் கிடைக்கிறது. உபரியை விற்று காசும் பார்க்கின்றனர்.

பாவாலியை சேர்ந்த கற்பகவள்ளி: இங்குள்ள பெரும்பாலன வீடுகள் மரங்கள் சூழ்ந்து ரம்மியமான பின்னணியில் அமைந்திருக்கும். கால்நடைகள் வளர்ப்பதால் இதன் இயற்கை உரங்களை பயன்படுத்தி காய்கறிகளை விளைவிக்கிறோம்.

அவரவர் குடும்பத்துக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்வதால் குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுவதில்லை. விருதுநகர் தரிசு நிலம் மிகுந்த கரிசல்காடு என்பர். இப்படி கூறுபவர்கள் பாவாலியை ஒரு முறை பார்வையிட்டால் சுற்றுச்சூழல் பசுமையாக ,வறட்சியாக வைத்து கொள்வது அவரவர் கையில் தான் உள்ளது என்பதை உணர்ந்து கொள்வர், என்றார்.

Related posts

Leave a Comment