தெப்பத்தின் பெருமையை பேசும் ஜோகில்பட்டி

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜோகில்பட்டி கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. இதே நிலை நீடித்தால் ஒட்டுமொத்த கிராம மக்களும் தண்ணீருக்காக குடும்பம், குடும்பமாக இடம் பெயரும் சூழல் ஏற்படும் என அஞ்சினர்.

தண்ணீர் பஞ்சத்தை நீக்க என்ன தான் வழி என மக்கள் ஒன்று கூடி சிந்தித்தனர். விளைவு கிராமத்தின் மையத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் தெப்பத்தை துார் வாரி மழை நீரை சேமிப்பது என முடிவாக,கிராம மக்கள் சார்பில் நிதி திரட்டி தெப்பம் துார் வாரப்பட்டது. மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளம் வெட்ட வெளிகளில் பாய்ந்து வீணாவதை தடுத்து தெப்பத்திற்கு திருப்பி விட்டனர்.

இதன் விளைவு மழை நீர் தெப்பத்தை கடல் போல் நிரப்பி வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வீடுகள் தோறும் ஆழ்துளை கிணறுகளில் நீரூற்று பெருகி தண்ணீர் பஞ்சத்துக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டது.

Related posts

Leave a Comment