புதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

புதிய கல்விக் கொள்கை தொடர்பான மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

🔲புதிய தேசிய கல்விக் கொள்கையின் உயர்கல்வி சீர்திருத்தம் தொடர்பாக இன்று நடைபெற உள்ள மாநாட்டை, பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

🔲மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும், பல்கலைக்கழக மானியக்குழுவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில், ஆன்லைன் மூலம் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

🔲மாநாட்டில், பல துறைகள் கொண்ட வருங்காலத்தை எதிர் நோக்கக் கூடிய கல்வி, தரமான ஆய்வு, கல்வியில் மேலும் சிறந்த இடத்தை அடைவதற்காக தொழில்நுட்பத்தையும் கல்வியில் சேர்த்தல், போன்ற பல்வேறு முக்கியமான அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

Related posts

Leave a Comment