பி.இ மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஆக.12ல் ஆரம்பம் – அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்லைக்கழகம் தெரிவித்துள்ளது. இரண்டு, மூன்று, இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் அக்டோபர் 26ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் கடந்த மார்ச் மாதம் முதலே பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்களை வைத்து ரிசல்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளும், கல்லூரிகளும் கொரோனா தனிமை முகாம்களாக மாற்றப்பட்டுள்ளதால் பள்ளி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் எப்போது திறக்கப்படும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க ஆன்லைன் மூலம் பாடம் நடத்த ஆரம்பித்து விட்டனர் ஆசிரியர்கள். தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் பள்ளி, அரசு கல்லூரி மாணவர்களுக்கு பாடங்களை நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பி.இ., இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்படும் என்றும் அக்டோபர் 26ஆம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தவிர அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இறுதியாண்டு மாணவர்களுக்கும் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

Leave a Comment