Rajapalayam Mla 07-08-2020

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 2 ம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு இன்று (07.08.2020) காலை 9 மணி அளவில் இராஜபாளையம் தொகுதி செட்டியார்பட்டி பேரூராட்சியில் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் கலைஞர் அவர்களின் திரு உருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி, பேரூராட்சியில் பணிபுரியும் 47 துப்புரவு பணியாளர்களுக்கு வேஷ்டி சட்டை மற்றும் சேலைகள் வழங்கினார். இந்நிகழ்வில் துப்புரவு பணியாளர் ரேகா அவர்கள் எங்களுக்கென தனியாக நலவாரியம் அமைக்கவும் தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என MLA அவர்களிடம் கேட்டார் அதற்கு MLA அவர்கள் 2021 ல் தலைவர் கலைஞர் அவர்களின் ஆசியுடன் திமுக தலைவர் அன்பு தளபதியார் ஸ்டாலின் ஐயா அவர்கள் முதல்வரானதும் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜுன் 3 ல் துப்புரவு பணியாளர்களுக்கென தனியாக நலவாரியம் அமைத்து கொரோனா காலத்தில் உங்களது சேவையை பாராட்டி துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நிரந்தர அரசு பணி வழங்க ஆணையிடுவார் எனக்கூறினார். இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் RG.செல்லத்துரை R.இராஜபாண்டியன் E.K.இராதாகிருஷ்ணன் S.கலைவானன் பா.செல்வகனி விநாயகமூர்த்தி மகேந்திரன் சேவுகப்பாண்டியன் சகாயம் முத்துராஜ் கழக நிர்வாகிகள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

Leave a Comment