சிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டம் – “எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 55வது தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு சிங்கப்பூரின் அருமைகளையும் பெருமைகளையும் எடுத்துரைக்கும் வண்ணம், “எங்கள் சிங்கப்பூர்” என்ற பாடல், சிங்கப்பூரின் தேசிய தினமாகிய இன்று வெளியிடப்பட்டது. ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவர், பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் எழுதிய இப்பாடலுக்கு, சிங்கப்பூர் இசைக்கலைஞர் பாடகர் “இசை மணி” பரசு கல்யாண் இசையமைத்து காணொளியாக உருவாக்கியிருக்கிறார். சிங்கப்பூர் வாழ் இசைக்கலைஞர்களாகிய அருண் பிரசாத், தீபக் ஐயர், கார்த்திக் மகாதேவன், மாதவன் குணா, ம்ரினல் நாராயன், மைத்ரயி வாசுதேவன், மதியழகன், பிரசாந்தி சந்தானம், ரவின் ராஜ், சேது, சோபனா ராச்சேல், சுமா பாலகிருஷ்ணா, விநாயா ராஜகோபால் மற்றும் பரசு கல்யாண் உள்ளிட்ட 14 பாடகர்கள் முதன்முறையாக இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர். சிங்கப்பூர் நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினர்,…

Read More

பிரதமர் #மோடிக்கு முதல்வர் #ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு.!!!

#ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் ஏற்படுத்தும் திட்டத்திற்கு #அடிக்கல் நாட்டும் விழா: பிரதமர் #மோடிக்கு முதல்வர் #ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு.!!!

Read More

எம்.எல்.ஏ.,க்களுக்கு செல்வாக்கு எப்படி? ஆளும் கட்சி அதிரடி; உளவுத்துறை ‘சர்வே’

தமிழக சட்டசபை தேர்தலுக்கு, ஆளும் கட்சியான, அ.தி.மு.க., தயாராகி வரும் நிலையில், ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதி மக்களிடம் உள்ள செல்வாக்கு குறித்து, உளவுத்துறை, ரகசிய, ‘சர்வே’ எடுத்து வருகிறது. தமிழகத்தில், மார்ச், 25ல் துவங்கிய ஊரடங்கு, வரும், 31ம் தேதி முடிவடைகிறது. இதன் காரணமாக, அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன. தேர்தலுக்கு தயார் தற்போது, கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, சில மாதங்களே உள்ளன. எனவே, அரசியல் கட்சிகள், தேர்தலுக்கு தயாராக துவங்கி உள்ளன. தற்போதுள்ள கூட்டணி தொடருமா அல்லது மாறுமா என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியும், தங்களுக்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க., தலைமை, தேர்தலுக்கு வேகமாக தயாராகி வருகிறது. சட்டசபை தேர்தலை மனதில் வைத்து, அதிருப்தியாளர்களை சரிக்கட்ட, இரண்டு…

Read More

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: மாணவர்களும், பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஆக., 10ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. பள்ளி மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக பொதுத்தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது.  முதல்முறையாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் அதாவது, நூறு சதவீத தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அனைத்து பள்ளிகளுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. தேர்வு முடிவுகள் விபரம் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை: 9 லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணவியரின் எண்ணிக்கை: 4 லட்சத்து…

Read More

#sengottaiyan#Tamilnadu#Coronavirus#onlineeducation

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது – அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனைகொரோனா வைரஸ் பிரச்சினையால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளனபள்ளிக்கல்வித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனைதமிழகத்தில் தற்போது ஆன்லைன் மூலம் பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன

Read More

101 ராணுவ தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை; ரூ.4 லட்சம் கோடிக்கு உள்நாட்டில் தயாரிப்பு

புதுடில்லி : சுயசார்பை பெறும் வகையில், 101 வகையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். இதன் மூலம், 2025க்குள், இந்த ஆயுதங்களின் இறக்குமதி நிறுத்தப்படும். ராணுவத்துக்கான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் கொள்முதலில், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து, இந்தியா தான் அதிக அளவில் செலவிடுகிறது. நாட்டின் ராணுவத் தேவைகளில், 60 – 65 சதவீதம், இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக பல்வேறு நாடுகளுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், 101 வகையான ஆயுதம் மற்றும் தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான, ராஜ்நாத் சிங் அறிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: பல்வேறு துறைகளில், சுயசார்பு நிலையை அடைய வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இலகு ரக ஹெலிகாப்டர்…

Read More

‘சென்டிமென்ட்’படி தொகுதி மாறும் ஸ்டாலின்!

சென்னை: கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும் தேர்தலில் தொகுதி மாறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, கொளத்தூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக , தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உள்ளார். அவர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அந்த தொகுதியில, கருணாநிதி வெற்றி பெற்ற போது தான், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்தது. அந்த, ‘சென்டிமென்ட்’ப்படி, அங்கு போட்டியிட எண்ணியுள்ளார். மேலும், கொளத்தூர் தொகுதியில், அவரோட மகன், உதயநிதி போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

Read More

நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ரஜினி நன்றி

சென்னை: திரையுலகில் 45 ஆண்டுகள் நிறைவு செய்தததற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, ‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். திரையுலகில் 45 ஆண்டுகளை நடிகர் ரஜினி நிறைவு செய்கிறார். இதற்காக திரையுலகை சார்ந்தவர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு ரஜினி, டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டதாவது: என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

Read More

திருமணமான ஒரு மாதத்தில் பெண் கொலை

சிவகாசி:சிவகாசி அருகே திருமணமாகி ஒரு மாதத்திலே இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். ஆலமரத்துபட்டி ரோடு பெரியார்காலனியை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி செல்வமணிகண்டன் 26.இவருக்கும் திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த பிரகதிமோனிகா 24, க்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. வேலைக்கு சென்ற கணவரிடம் பகல் 1:20 மணிக்கு அலைபேசியில் பேசி உள்ளார். 2:00 மணிக்கு பிரகதி மோனிகா கையில் அரிவாள் வெட்டுடன் கழுத்தறுத்த நிலையில் இறந்து கிடந்தார். ஒரு பவுன் தங்க ஜெயின் காணவில்லை. திருட்டுக்காக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மதுரை எஸ்.பி., சுஜித்குமார், விருதுநகர் ஏ.டி.எஸ்.பி., மாரிராஜன், டி.எஸ்.பி., பிரபாகரன் பார்வையிட்டனர்.

Read More