இருக்கன்குடி ஆடி வெள்ளி விழா ரத்து

இருக்கன்குடி:இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி விழாவில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஹிந்துசமய அறநிலை துறை அறிவித்துள்ளது.

இக்கோயிலில் ஆடி கடைசி வெள்ளியான ஆகஸ்ட் 14ல் பக்தர்களின்றி அம்மனுக்கு பகல் 12:00 மணி முதல் 2:00 வரை சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்படும். இதை பக்தர்கள் வீட்டில் இருந்தபடி கண்டு அம்மனை தரிசிக்க ஆன்லைன் வாயிலாக நேரிடையாக ஒளிபரப்பு செய்ய ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.இது www.tnhrce.gov.in மற்றும் யூ டியூப் சேனலில் ஒளிபரப்பாகிறது என கோயில் உதவி ஆணையர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment