சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சணல் பைகள்

சிவகாசி:

கை தொழில் ஒன்றை கற்றுக் கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்பதற்கேற்ப பெண்கள் பலரும் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கின்றனர். கண்ணுக்கு தெரியாமல் பிளாஸ்டிக் கேரி பேக்குகளால் உருவாகும் கேடுகளுக்கு என்னதான் மாற்று என யோசித்தால் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான பேப்பர், துணி, சணல் என சொல்லலாம். இதில் மக்கும் தன்மை உடைய சணல் பை சுற்றுச்சூழலுக்கு மிகவும் உயர்ந்தது.

அந்த வகையில் சிவகாசியை சேர்ந்த பி.பி.ஏ., பட்டதாரி பெண்ணான பூரணி 22, திருத்தங்கல் ரோடு நாடார் பேட்டையில் பூர்ணா ஜூட் பேக் என்ற பெயரில் சணல் பைகள் தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். சணலால் ஆன ஹேண்ட் பேக், லஞ்ச் பேக், வாட்டர் பாட்டில் பேக், பென்சில் பவுச், தாம்பூல பை, டிராவல் பேக், ஷாப்பிங் பேக், அலைபேசி பவுச் உள்ளிட்ட பைகளை இவரே தைத்து விற்பனை செய்கிறார்.

ஒவ்வொரு பைகளையும் விரும்பிய கலர் , மாடலில் செய்து தருகிறார்.பூரணி கூறியதாவது: பிளாஸ்டிக் மறு ஏற்பாடாகவும், எனது வாழ்க்கையை நானே வாழ வேண்டும் என்ற கனவே சொந்தமாக தொழில் செய்ய துாண்டியது. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் ரூ. 20 லிருந்து பைகளை விற்பனை செய்கிறேன். இது மட்கும் தன்மை உடையது என்பதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை,என்றார்.தொடர்புக்கு 91235 58590.

Related posts

Leave a Comment