‘சென்டிமென்ட்’படி தொகுதி மாறும் ஸ்டாலின்!

சென்னை: கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வான தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும் தேர்தலில் தொகுதி மாறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, கொளத்தூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக , தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உள்ளார். அவர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அந்த தொகுதியில, கருணாநிதி வெற்றி பெற்ற போது தான், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி அமைந்தது. அந்த, ‘சென்டிமென்ட்’ப்படி, அங்கு போட்டியிட எண்ணியுள்ளார். மேலும், கொளத்தூர் தொகுதியில், அவரோட மகன், உதயநிதி போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment