திருமணமான ஒரு மாதத்தில் பெண் கொலை

சிவகாசி:சிவகாசி அருகே திருமணமாகி ஒரு மாதத்திலே இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.

ஆலமரத்துபட்டி ரோடு பெரியார்காலனியை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி செல்வமணிகண்டன் 26.இவருக்கும் திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த பிரகதிமோனிகா 24, க்கும் ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. வேலைக்கு சென்ற கணவரிடம் பகல் 1:20 மணிக்கு அலைபேசியில் பேசி உள்ளார். 2:00 மணிக்கு பிரகதி மோனிகா கையில் அரிவாள் வெட்டுடன் கழுத்தறுத்த நிலையில் இறந்து கிடந்தார். ஒரு பவுன் தங்க ஜெயின் காணவில்லை. திருட்டுக்காக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மதுரை எஸ்.பி., சுஜித்குமார், விருதுநகர் ஏ.டி.எஸ்.பி., மாரிராஜன், டி.எஸ்.பி., பிரபாகரன் பார்வையிட்டனர்.

Related posts

Leave a Comment