தேடிச்சென்று உதவும் முதல்வர்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு

சிவகாசி:”ஏழை மக்களுக்கு தேடிச்சென்று உதவும் முதல்வராக பழனிச்சாமி உள்ளார்,”என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

சிவகாசி விஸ்வநத்தம் ஊராட்சி முனீஸ்வரன் காலனி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த அவர் பேசியதாவது: அரசை தேடி மக்கள் சென்ற நிலை மாறி மக்களை நோக்கி முதல்வர் வந்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார்.

அதன்படி நானும் உங்களை தேடி வந்துள்ளேன். சிவகாசி தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் தாமிரபரணி குடிநீரை கொடுத்துள்ளோம். இனி குடிநீர் பற்றாக்குறை என்பதே இருக்காது. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு குறைகளை கூறலாம் என்றார்.

Related posts

Leave a Comment