நீங்கள் இல்லாமல் நான் இல்லை: ரஜினி நன்றி

சென்னை: திரையுலகில் 45 ஆண்டுகள் நிறைவு செய்தததற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு, ‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

திரையுலகில் 45 ஆண்டுகளை நடிகர் ரஜினி நிறைவு செய்கிறார். இதற்காக திரையுலகை சார்ந்தவர்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு ரஜினி, டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டதாவது: என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இத்துடன் நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

Related posts

Leave a Comment