10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு: மாணவர்களும், பள்ளிகளும் 100 சதவீத தேர்ச்சி

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஆக., 10ம் தேதி) வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதளம் வாயிலாக தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. பள்ளி மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., வாயிலாக பொதுத்தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது. 

முதல்முறையாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் அதாவது, நூறு சதவீத தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அனைத்து பள்ளிகளுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன.

தேர்வு முடிவுகள் விபரம்

மொத்த மாணவர்களின் எண்ணிக்கை: 9 லட்சத்து 39 ஆயிரத்து 829

மாணவியரின் எண்ணிக்கை: 4 லட்சத்து 68 ஆயிரத்து 70

மாணவர்களின் எண்ணிக்கை: 4 லட்சத்து 71 ஆயிரத்து 759

மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரின் எண்ணிக்கை: 6 ஆயிரத்து 235

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

ஆகிய இணையதளம் வாயிலாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

ஆக., 17 முதல் 21ம் தேதிவரை பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியர் வழியாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

குறை தீர்த்தல்

இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்கு பதிலாக, மாணவர்கள் பயின்ற பள்ளியின் வாயிலாக குறை தீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக அரசு தேர்வுத் துறை இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆக., 17 முதல் 25ம் தேதிவரை மாணவர்கள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். மாணவர்களது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் வாயிலாகவே முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். 

Related posts

Leave a Comment