முயற்சி இருந்தால் எதையும் அடையலாம்,முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் சாதனை – ஐஸ்வர்யா ஷியோரன்

ராஜஸ்தானை சேர்ந்த ஐஸ்வர்யா ஷியோரன் டெல்லியில் கல்லூரிப்படிப்பை முடித்து, அதன் பிறகு, இந்தூர் ஐ.ஐ.எம்-மில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே மாடலிங்கில் ஈடுபட்டு வருகிறார்.மாடலிங் துறையில் பணிபுரிந்து வந்தாலும் ஐஸ்வர்யாவுக்கு சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி அரசுப் பணிக்குச் செல்ல வேண்டும் என்பது அவரது கனவாக இருக்க, அதனை நிறைவேற்ற, பத்து மாதங்களாகத் தேர்வுக்குத் தயாராகியுள்ளார். தனிப்பயிற்சி எதுவும் எடுக்காமல் வீட்டிலேயே படித்த அவர், சமீபத்தில் வெளியான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவில் இந்திய அளவில் 93-வது ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.‘ஐஸ்வர்யா ராய்க்குப் பிறகு நானும் மிஸ் இந்தியாவாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறினேன். ஆனாலும் சிவில் சர்வீஸ் தேர்வு பாஸாக வேண்டுமென்பது என் கனவு’, அதனை தொடர்ந்து சிவில் சர்வீசஸ் தேர்வுக்குத் தயாரானேன். இதற்காக நான் எந்தவித பயிற்சி வகுப்புகளுக்கும் செல்லவில்லை. செல்போன், சமூக வலைத்தளங்கள் என…

Read More

I.A.S. SUCCESS STORY I வறுமையில் சாதித்த விவசாயி மகள் அபிநயா ; ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி

கரூர் மாவட்டம் முன்னூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம். இவரது மகள் அபிநயா. அரசு பள்ளியில் படிப்பை முடித்த இவர், கோயம்புத்தூர் அரசு வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்.பி., அக்ரி பயின்றுள்ளார். பள்ளியில் படிக்கும் போதே ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார். இதனால் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், இவர் டி.என்.பி.எ.ஸ்பி தேர்வில் வெற்றி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். அரசு பணி கிடைத்தும் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு தொடர்ந்து தன்னை தயார்படுத்தியுள்ளார். ஐ.ஏ.எஸ் தேர்வில் நான்கு முறை தோல்வியடைந்த நிலையில் தன்னம்பிக்கை இழக்காமல் படித்துள்ளார். கடந்தாண்டு ஜூன் மாதம் ஐ.ஏ.எஸ் தேர்வெழுத்தியுள்ளார். தேர்ச்சி பெற்று அக்டோபர் மாதம் நடைபெற்ற அடுத்தகட்ட தேர்விலும் தேர்ச்சி பெற்று, இந்தாண்டு பிப்ரவரி மாதம் நேர்முக தேர்வை முடித்துவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது வெளியாகி உள்ள ஐ.ஏ.எஸ் தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  இந்திய அளவில் 559 ஆவது நபராக வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து பரமக்குடி வேளாண்மை…

Read More